வெங்கு! திட்டம் தடங்கல் இன்றி நிறைவேறி விட்டால், பல கோடி ரூபாய்….நீங்கள் கவலைப் படாதீர்கள், பாஸ்!ஒரே நாள் தான்! எல்லோரும் வெளி நாடு சென்று விடலாம்!வெங்கு! பொம்மைக் குழம்புகளை, வார்ப்புகளுக்கு நிறைய வைத்துக் கொள்!ஒகே, பாஸ்!அமாவாசை இரவு, நம்மைகுபேரர்கள் ஆக்கும் இரவு!ம்.,. இவனை அதுவரை சிறையில் அடைத்து வை!சரி பாஸ்!நம் திட்டம் நிறை வேறியதும், இவனைக் கொன்று, போலீஸ் துறையின் கவனத்தை திசை திருப்பி விடலாம்! போலீசார் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள்!ஆகா!… அபாரம்! அற்புதம்!ரகு ‘திடீரென’ சிரித்தார்!ஹா.. ஹா…ஹா…மறைந்து இருக்கும் பேடியே! உன் கற்பனை மிகவும் அபாரம்!டேய்!… நாவை அடக்கு!வெங்கு சீறினான்!பூனை, கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று நினைத்ததாம்!போலீஸ் துறையின் ஆற்றலை பொறுத்துஇருந்து பார்! சுண்டேலியைப் போல் நசுக்கி விடுவார்கள் உங்களை!என்ன திறமை! காணாமல் போன உன்னை தேடுகின்ற லட்சணத்தை பார்த்தாய்அல்லவா…அடே! மறைந்து இருக்கும் மாமிச பிண்டமே! தைரியம் இருந்தால் எதிரே வா!வெங்கு! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசும் இந்த நாயை…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
வெங்கு இன்னொரு பட்டனை அழுத்தினான்.சி. ஐ. டி. இருந்த அறையின் கதவு திறந்தது!ரகு உள்ளே வந்தார்!வாய் சவடால் வீரர், சி. ஐ. டி. புலியே வருக!தலைவருக்கு வணக்கம் சொல்!வேண்டாம் வெங்கு! வழக்கமான போலீஸ் திமிர் இருக்கும்!உத்தரவு கொடுங்கள் பாஸ்! திமிரை அடக்குகிறேன்!வாய் கொழுப்பு நரிகளே!… உங்களுக்கு அழிவு நெருங்கி வருகிறது!என்ன!… என்ன சொன்னாய்?வெங்கு!அவசரப் படாதே!நினைத்தால் நின்ற இடத்திலேயே சாம்பல்ஆக்கி விடலாம்.இப்போது போலீஸ் இவனை தேடுவதில் முனைந்துள்ளது! இந்த சந்தர்ப்பத்தில் நமது வேலையை முடித்து விட வேண்டும்!எல்லாம் முடிந்த பின் இவனை…ஆகா!… அபாரமான ஐடியா!ஐடியா அபாரம் தான்!ஆனால்…என்ன, ஆனால்…?உங்களுக்கு சமாதி கட்டப்படுகிறது!…எங்களுக்கா சமாதி கட்டப் போகிறாய்?இந்தா, இதை வாங்கிக் கொள்!வாங்கியதை உடனே திருப்பித் தருகிறேன்!இது, அசல்….கும்…கும்..இது, வட்டி! கும்… அம்மா…! இது எப்படி இருக்கு?…தம்பி, இதுதான் போலீஸ் அடி!… தெரிஞ்சுக்கோ!வெங்கு ஆவேசத்துடன் எழுந்தான்.அயோக்கிய நாயே!…வெங்கு நிறுத்து!மன்னிச்சுடுங்க, பாஸ்!அடி தாங்க முடியாமல்அவசரப்பட்டு விட்டேன்!வெங்கு! சி. ஐ. டி. யை தேடுவதில் போலீஸ்சார்தீவிரமாக இருக்கிறார்கள்! இந்த…
64-தொன்மை மறவேல்அன்று ரமணிக்குப் பிறந்த நாள்.மாலையில் வீட்டிற்குஅவளுடன் படிக்கும் மாணவிகளில் சிலரைஅழைத்து இருந்தார்கள்.கேக், பீசா, பர்கர், கோக் என ஆடர் செய்து கொண்டாடினார்கள்.இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தாத்தாவும், பாட்டியும் எங்க காலத்தில் பிறந்த நாளே கொண்டாட மாட்டார்கள், அப்படி சிலர் கொண்டாடுபவர்கள் மிட்டாய் கோடுப்பார்கள்.பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.வடை, பாயாசம், பிடித்த இனிப்பு பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள்.நம் தொன்மையான உணவு கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதால் இந்த குழந்தைகளின் ஆரோக்கியம் அல்லவா கெட்டுப் போகிறது என்று ஆதங்கத்துடன் பாட்டி சொல்ல….“தொன்மை மறவேல்”என்று புலவர் ஔவையார் கூட சொல்லி இருக்கிறார் என்றார் தாத்தா.கால மாற்ற சுழற்சியில்புரிந்து கொள்வார்கள் என்றாள் பாட்டி.ஆமம்! என்று தலையைஆட்டினார் தாத்தா.
சி. ஐ. டி. ரகுவுடன்,வெங்குகாரில் ஏறினான்!கார் விரைந்தது!கார் சென்ற திசையை இரண்டு கண்கள் கூர்ந்து கவனித்தது!கமிஷனரின் ரகசிய போன் அலறியது!டிரிங்.. டிரிங்…ங்…ங்…அலோ!… எஸ்…அப்படியா?…தொடர்ந்து கண் காணித்து தகவல் அனுப்பு.சி. ஐ. டி…யை ஏற்றி வந்த கார் உள்ளே சென்றது!உள்ளே, சென்ற கார் நின்றதும் அனைவரும் இறங்கினர்!மயங்கிய நிலையில் இருந்த ரகுவின் கண்களை வெங்கு கறுப்புத் துணியால் கட்டினான்.ம்…தொடர்ந்து நடங்க!அவர்கள் நின்றதும் திடீரென ஒருவழி தோன்றியது.நகர்ந்து கொண்டிருந்த அறை நின்றதும், சுவரின்மறுபகுதி வாயை பிளந்தது!சி. ஐ. டி. ரகுவை உள்ளே தள்ளினர்.கதவு மூடிக் கொண்டது!மறுநாள்…சபாஷ், வெங்கு! கச்சிதமாக வேலையைமுடித்து விட்டாய்!உன் திறமையை பாராட்டி,உனக்கு பதவி உயர்வு அளிக்கிறேன்!…ரொம்ப மகிழ்ச்சி, ‘பாஸ்’!இன்று முதல் நீதான் உதவி தலைவர்!நன்றி பாஸ்!தோழர்களே! நீங்கள் இனி வெங்குவின் கட்டளையை என் கட்டளை போல் மதித்து நடக்க வேண்டும்.உத்தரவு, பாஸ்! தொடரும்.
ஏட்டு போனை வைத்தார்!ரகு திரும்ப உள்ளே வந்தவர், வாசலில் நின்று கொண்டு இருந்தார்.சரிதான் பறவை இரையை உணர்ந்து விட்டது.அவர் மெல்ல சிரித்துக் கொண்டே திரும்பினார்!இரவு விடுதி ஒன்றில் மேல் நாட்டு இசை முழங்கிக் கொண்டு இருந்தது!மங்கிய விளக்கில் அரைகுறை ஆடையுடன் ஒருத்தி நடனம் ஆடிக் கொண்டு இருந்தாள்!மற்றொரு மூலையில்…வெங்கு மது போதையில்ஒரு அழகியை அணைத்து தள்ளாடிக் கொண்டு இருந்தான்.அந்த நேரத்தில்…சே! நேரம் காலம் தெரியாமல்….!மெல்ல அழகியை விட்டு நழுவினான்.அடுத்த அறைக்குள் புகுந்தான்.சற்று நேரத்தில்…..வெங்கு, கரடி பொம்மையின் காதைதிருகினான்!பாஸ்…. பாஸ்…வெங்கு ஹியர்!எஸ்…வெங்கு.. போலீசாரின் மேலிட கடிதம் ஒன்று கிடைத்துஇருக்கிறது…நமது வேலையை போலீஸ் இலாகா குறைத்து விட்டது!சி. ஐ. டி. ரகு நமது பொம்மை கடையைசந்தேகப்பட்டு சுற்றுகிறான்…ரகுவிற்கு கெடு 15 நாள்தான்….நாளை இரவுக்குள்சி. ஐ. டி. யை பாதாளசிறையில் அடைத்து விடு வெங்கு!…அவனை தேடுவதில் போலிசாரின் கவனம் திரும்பட்டும்!…காரியத்தை கச்சிதமாகமுடித்து விட்டு வா!ஓகே, பாஸ்!777சிகரெட் இருக்கா?இல்லை சார்!அப்போது….எக்ஸ்யூஸ்மீ சார்!உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்…ம்…மான் வலைக்கு…
அப்படியா? பொம்மை பார்சல் தானா?இந்த பார்சல் போய்கிடைத்திருக்குமா?ஓகே!நன்றி சார்!சரிதான்! எதிரி எதிரில் தான் இருக்கிறான். ஆதாரம்….வலையை விரிக்க வேண்டியதுதான்.கமிஷனர் சிந்தனையுடன்அமர்ந்து இருந்தார்!அப்பொழுது…ரகசிய ‘பைல்’ வந்தது!கமிஷனர் திகைப்பும்ஆச்சரியமும் பொங்கபைலைத் திறந்தார்!நம் நாட்டின் புராதனசிலைகள் மிக வேகமாகவும், அதிகமாகவும் வெளி நாடுகளுக்கு கடத்தப் படுகிறது…இந்நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் பழங்கால கலைச் செல்வம் அனைத்தையும் இழந்து விடுவோம்….எனவே, போலீஸ் துறையினர் விரைந்து செயலாற்ற வேண்டும்!அரசாங்கமே கவலை அடையும் நிலை வந்து விட்டதே!…அனைவரையும் உடனடியாக முடுக்கி விட வேண்டும்.அந்த நேரத்தில்…எஸ்…கம் இன்!சி. ஐ. டி. ரகு உள்ளே வந்தார்!சிறிது நேரம் சென்று,சி. ஐ. டி. ரகு வெளியில் வந்தார்!அவரை ஏற்றிக் கொண்டு ஜீப் கிளம்பியது!கமிஷனர் உத்தரவு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை!சந்தர்ப்பத்தை பயன் படுத்தினால் மேலே வந்து விடலாம்!மறு நாள்…தலைமை போலீஸ் நிலையத்தில் இருந்து சி. ஐ. டி, ரகுவிற்கு ஒரு கடிதம் வந்திருந்தது!அதில்…மிஸ்டர் ரகு, தகுந்த ஆதாரம் இன்றி விமானத்தை…
63-தையல் சொற்கேளேல்சதாசிவத்திற்கும், சுகுணாவிற்கும் ஒரே மகன்.அவன் நன்றாகப் படித்து அரசாங்க வேலையில் பணிபுரிந்தான்.அவனுக்குத் திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.சுகுணா எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் சாதகம் சரியில்லை, குடும்பம் சரியில்லை, வசதியில்லை இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திருமணத்தை தட்டி விட்டுக் கொண்டே சென்றாள்.பையனுக்கு வயது முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது.சதாசிவம் பார்த்தார். இனி இவள் சொல் கேட்டாள் சரியாக வராது. மகனுக்குப் பிடிக்கிறதா? எனக் கேட்டால் போதும், என்ற முடிவுக்கு வந்து பெண் பார்த்ததில் சுகந்தி படிப்புடன் நல்ல குடும்பமாக அமைந்தது.தன் மகன் சம்மதத்துடன் நல்ல முறையில் திருமணம் நடந்தது.யோசிக்கத் தெரியாமல்காலம் கடத்தி மன அழுத்தத்திற்கு உள்ளாவதை விட…நல்ல முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் முடிவு எடுக்கும் போது எதிர் மறையான எண்ணம் உள்ள பெண்பேச்சு கேட்கக்கூடாது. என்று அன்றே ஔவையார் “தையல் சொற்கேளேல்”என்று கூறி இருக்கிறார்.சதாசிவம் எடுத்த முடிவாள் அந்தக் குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஹைக்கூ கவிதைகள் 41- பனிக்காலம் குளிரில் நடுங்குகிறது ‘உய்’என்று மரம்.42- தலை வணங்கி வரவேற்கிறது மரம் பணியை.43- சலசலப்பு சத்தத்துடன் சங்கீதம் பாடுகிறது நீர் வீழ்ச்சி.44- மரச் செருப்பு அணிந்த மரம் இயற்கை உரம்.45- சின்ன அசைவில் சிருங்கார நடனம் மரக்கிளைகள்.46- பச்சைக் கம்பளத்தில் வண்ணப் புள்ளிகள் இலையுதிர் காலம். 47- இரவு பகலாய் நகர பாதுகாவலன் மரங்கள். 48- மரத் தளம் ராக்கெட் பறக்கும்பூ .49- வண்ண வண்ண அணிவகுப்பு மாலை வெயில்.50- நீர் ஓடை பனியாய் சறுக்கி விளையாட. கவிஞர் ச. மல்லிகா
ஹைக்கூ கவிதைகள் 31-சூரியன் ஒளி பட்டு கரைகிறது பனிக்கட்டி.32- வீடு தோறும் பச்சைக் கம்பளம் புல்வெளி. 33- பச்சை சீருடை அணி வகுப்பு மரங்கள்.34- நெழிந்து நெழிந்து செல்கிறது பாம்பு ஏரி.35- ஆமை போல் செல்கிறது மேகம்.36- கப்பல் செல்லும் ஆழ்கடல் நயக்கரா ஏரி.37- கொட்டும் அருவி வற்றாத தண்ணீர் நயக்கரா ஏரி.38- பசுமை புரட்சி செய்கின்றது வெட்டாத மரங்கள். 39- அடுத்தடுத்து கப்பல் மேலே போய் வழிவிடும் துலுத் பாலம்.40- பச்சோந்தி போல் நிறம் மாறுகிறது இலை, பூக்கள். மலரும்.
கைக்கூ கவிதைகள் 21- மலர்கள் பூத்து கண் கவர்ந்தது துணி பூக்கள். 22- தூண்டியில் பிடித்த மீன் ஏரியில் விட்டனர் பொழுது போக்க.23- காகிதக் கப்பலில் நாம் ரிமோட் கப்பலில் அமெரிக்கா விளையாட்டு24- மறைந்து தாவிபுல் மேயும் முயல் குட்டி.25- புல்லில் ஒளிந்து மறைந்து விளையாடும் பட்டாம்பூச்சி.26- மணல் வீடு இடிந்ததுமர வீட்டில் சிறுவன். 27- வானம் தொட வளர்கிறது மரம்.28- குளிர் காய வெயில் ஒளி பட்டு மகிழும் அணில்.29- அணிவகுத்து நிற்கிறது மக்கும் மக்கா குப்பை தூய்மை காக்க.30- தெரு நாய் இல்லை துள்ளி விளையாடும் முயல். மலரும்.