64-தொன்மை மறவேல்
அன்று ரமணிக்குப் பிறந்த நாள்.
மாலையில் வீட்டிற்கு
அவளுடன் படிக்கும்
மாணவிகளில் சிலரை
அழைத்து இருந்தார்கள்.
கேக், பீசா, பர்கர், கோக் என ஆடர் செய்து கொண்டாடினார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தாத்தாவும், பாட்டியும் எங்க காலத்தில் பிறந்த நாளே கொண்டாட மாட்டார்கள், அப்படி சிலர் கொண்டாடுபவர்கள் மிட்டாய் கோடுப்பார்கள்.
பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.
வடை, பாயாசம், பிடித்த இனிப்பு பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள்.
நம் தொன்மையான உணவு கலாச்சாரத்தை
சொல்லிக் கொடுப்பதை
விட்டுவிட்டு வெளிநாட்டு
உணவு வகைகளை சாப்பிடுவதால் இந்த குழந்தைகளின் ஆரோக்கியம் அல்லவா கெட்டுப் போகிறது என்று ஆதங்கத்துடன் பாட்டி சொல்ல….
“தொன்மை மறவேல்”
என்று புலவர் ஔவையார் கூட சொல்லி இருக்கிறார் என்றார் தாத்தா.
கால மாற்ற சுழற்சியில்
புரிந்து கொள்வார்கள் என்றாள் பாட்டி.
ஆமம்! என்று தலையை
ஆட்டினார் தாத்தா.