Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

ஆத்திசூடி கதைகள் 66- நன்மை கடைப்பிடிகந்தன் விவசாய குடும்பத்தில் பிறந்தவன்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்.அவன் அப்பா, அம்மாவுடன் வயலுக்குப் போவதால், விவசாயத்தின் மேல் அவனுக்கு பற்று இருந்தது.அப்பா சொல்லாமலே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவான், களை எடுப்பான்.ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொள்வான். தீவனம் போடுவான்.படிக்கவும் செய்வான்.ஒரு நாள் கந்தனிடம் அப்பா சொன்னார் நான் தான் கஷ்டப் படுகிறேன். நீ நல்லா படித்து வேலைக்குப் போ! என்றார்.அப்பா இந்த மண்ணில் தான் நானும் பிறந்தேன் மண்தராததை வேறு யார் தருவா?என் படிப்பும், உங்கள் உழைப்பும் சேர்ந்தால் போதும். வேலை நாம பிறருக்குக் கொடுக்கலாம்.“நன்மை கடைப்பிடி” என்று ஔவையார் கூடச்சொல்லி இருக்கிறார்கள்.நம்ம விவசாய வேலையைத் தொடர்ந்து செய்வோம்.உங்களுக்குத் தோள் கொடுக்கும் தோழனாக இருப்பேன். என்று பெரிய மனிதனைப் போல் உறுதியாகச் சொன்னான் கந்தன்.

Read More

மாதம் மாதம் வரும் பௌர்ணமி வளர் பிறையாய் வரும் முழுமதிவாதம் செய்து அமாவாசை பௌர்ணமி ஆனது பட்டர் நூறு பாடலால்ஊதல் குளுமை உடல் நடுங்க வெண்மதி கண்டுமனம் நெகிழகாதல் கொண்டு பௌர்ணமி காண அன்பு ஆற்று நீராய் ஓட…தமிழர் புத்தாண்டு சித்திரை மகள் வரவு கண்டு முக்கனிகாய்த்ததுஉமி அகன்று அரிசி வரும் உழவர் உழைப்பில் காய், கனி கமித்தல் மனம் தமிழர்க்கு உண்டு கமழ்தல் உலகம் எங்கும் பரவும் குமிழ்தல் உரக்கச் சொல்வோம் தமிழன் மூத்த மொழி சித்திரை பௌர்ணமி உயர்வு உண்டு என்று சொல்வோம் ஏற்றம் எங்கு சென்றாலும் வெல்லும் துயரம் தூரப் போக உழைப்போம் துணிவு எமக்கு என்று சொல்வோம் தயாள குணம் தமிழன் பெருமை திடம் கொண்டு முழுமதி ஆவோம்கயல் விழியால் மீனாட்சி அருளால் கயமை அகற்றி வெற்றி கொள்வோம். கவிஞர் சு.…

Read More

சித்திரை வெயில் சுட்டு எரிக்கும் பௌர்ணமி நாளில் குளிர்ச்சி தரும் சத்திரம் எல்லாம் கூட்டம் நிறையும் கள்ளழகர் வரும் காட்சி காணநித்திரை வர நேரம் ஆகும் முழு நிலவு கண்டு பூசித்து முத்திரை பதித்த சித்திரா பௌர்ணமி சிந்தை மகிழ்விக்கும் முழு நிலவு.உலகம் யாவும் சுற்றும் நிலவே உன்னைக் கண்டு வணங்கி யாசிப்பார்அலர்தல் விரித்து மணம் வீசும் அல்லி மலரும் அசைந் தாடும்இலவம் பஞ்சு வெடித்து சிதரும் வெண் பஞ்சுகள் பறந்து உலாவரும்நிலவும் மேகத்தில் மறைந்து மறைந்து விளையாடி வெண் வெளிச்சம் காட்டும்.கல்வி ஞானம் தரவேண்டி பௌர்ணமி நாளில் பூசை செய்து உல் ஒளி வெளிச்சம் பெற உயர்வு வேண்டி பூசை செய்வர்ஆல் போல் வேர் ஊன்றி நிழல் கொடுக்கும் மரம் போல் வேல் கொடுத்த மதுரை மீனாட்சி மக்கள் குறை களையும் பௌர்ணமி.

Read More

சித்திரையில் வரும் பௌர்ணமி முழுநிலவே எத்தனம் முயன்ற வளர் பிறையே!முத்திரை பதித்து சுழலும் போது இத்தரையில் ஒளிச் சுடரே நீ!அத்திரி நிலவில் கதை சொல்லி ஆனந்தம் அடையும் சிறுவர் கூட்டம்!தித்தியம் உலக நன்மை அடையும் மதுரை நகரம் விழா கோலம்!பச்சைப் பைங்கிளி தோள் சுமந்து மரகதம், மாணிக்கம் கழுத்து அணிந்து!இச்சை கொண்டு சுந்தரேசனை மணக்க இசைந்த மீனாட்சி மணமகள் நீ!விச்சை கற்ற வீர மங்கை விண் சென்று மணமகனை அறிந்தாய்!உச்சம் தொட்ட பெண் மகளே உனது ஆட்சி மண் மணக்கும்!வைகைத் தோன்ற காரணம் ஆகி கள்ளழகர் இறங்க நதி ஓடி!மை விழியால் மீனாட்சி அண்ணன் பௌர்ணமி நாளில் ஆற்றைக் கடக்க!கை பிடித்த கணவருடன் வந்து காட்சி தந்து ஆட்சி செய்வாய்!தைவதம் உன்னை வணங்க வரும் பக்தர் கூட்டம் சித்திரா பௌர்ணமி.

Read More

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம்குற்றமேநக்கீரர் வாதிட்டு எரித்தபோது வயதில்லை!தருமிக்கு பொற்கிழியும்நக்கீரருக்கு புகழும்தமிழ் புலமைக்கு அங்கு வயதில்லை!மாங்கனி கொடுத்து உணவிட்ட புனிதவதியைஅம்மையே என்றழைத்தபோது வயதில்லை!அறுபத்து மூன்றுநாயன் மார்களில் ஒருவரானகாரைக்கால் அம்மையார் பாடலுக்கு வயதில்லை!கணபதியை வணங்கி கணநேரத்தில் முதுமைபெற்றதமிழுக்கு அர்ப்பணித்தஔவைக்கு வயதில்லை!தானுண்டு வாழ்வதை விடதமிழ் தழைக்கஔவைக்கு நெல்லிக்கனி தந்தஅன்பிற்கு வயதில்லை!காளியின் அருளால் காளிதாசர் ஆகிகவிதை பாடிய புலமைக்கு வயதில்லை!காலனை காலால் எட்டியுதைத்த பாரதி காலம் கடந்தும் வயதில்லா தமிழ்!காலம் காலமாய் கடந்த போதும் களமிறங்கிய புலமைக்கு வயதில்லாத போதுதொன்மை மிகுந்த தமிழ் செம்மொழிக்குவயதை தேடினேன் வதில்லா தமிழ்!வளரும் தமிழ் வாழும் தமிழ்! வயசுப் பிள்ளையாய் வளம்வரும் தமிழ்!வலிமை தனித்துவம் காட்டும் தமிழ்!மூத்த தமிழ் முழங்கும் தமிழ்!

Read More

10- இரவல் நகைஇது என்ன நம்ம வீட்டுசங்கிலி போல் அல்லவா தெரிகிறது, என யோசித்தான்.தனது வேட்டியை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு, கையில் நெருப்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டான்.மகேஷ் குதித்துக் கொண்டே எனக்கு…எனக்கு…எனதலையை நீட்டினான்.ஒவ்வொருத்தருக்கா சங்கிலியை போட்ட பேய்கள் மகேஷ் கழுத்திலும் சங்கிலியைப் போட்டது.உடனே, கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து கொளுத்தினான் மகேஷ். நெருப்பைப் பார்த்த பேய்கள் மறைந்து விட்டன.வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்ட மகேஷ் கழுத்தில் சங்கிலியுடன்வீட்டை நோக்கி வந்தான்.பேய்களிடம் இருந்து பிழைத்தது இறைவனின் செயல்தான். என நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு வந்தான் மகேஷ்.காலை விடிந்த உடன் வந்த விமலா அண்ணன்வந்து விட்டார்களா? மாலா, சங்கிலியை தருகிறாயா? என்றாள் விமலா.“நீ இன்னும் ஊருக்குப் போக வில்லையா?”என்றாள் மாலா.இப்பத்தான் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.சங்கிலி தருவதாகச் சொன்னாயே தருகிறாயா? எனக் கேட்டாள் விமலா.“என்ன சங்கிலியா? நான் காலையிலேயே கொடுத்தேனே!” என்றாள் மாலா.“என்ன? மாலா இப்படி சொல்கிறாய், என்ன ஆச்சு…

Read More

10- இரவல் நகைஅப்பளக் குடுமி தாத்தா உட்கார்ந்து இருந்தார்.அவரைச் சுற்றி சிறுவரும், சிறுமிகளும் கூடியிருந்தார்கள்.ராமு கையில் கடிகாரம் கட்டியிருந்தான்.அதை கவனித்த கோபு,“ஏய்! ராமு கடிகாரம் நல்லா இருக்குடா எப்ப வாங்கினாய்” என்றான்.“தீபாவளிக்கு எங்க அப்பா வாங்கித் தந்தாங்க” என்றான் ராமு.“டேய் கொஞ்ச நேரம் கொடுடா! கட்டி பார்த்து விட்டு தருகிறேன்.” என்றான் கோபு.கொடுப்பதா? வேண்டாமா?….. எனயோசித்துக் கொண்டிருந்தான் ராமு.இதை கவனித்த தாத்தா,“கோபு இங்கே வா” என்றார்.“அடுத்தவர் பொருளைக் கேட்பதே தவறு. அதற்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்”. என்றார் தாத்தா.ஹாய்…. தாத்தா கதை சொல்லப் போகிறார்.என குழந்தைகள் எல்லோரும் அமைதியாக கேட்க ஆரம்பத்தார்கள்.ஒரு ஊரில் மாலாவும், விமலாவும் பக்கத்து..பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள்.இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள்.ஒருவர் செய்வதை மற்றவருக்கு கொடுத்து உண்பது முதல், ஒருவருக்கு இல்லாததைமற்றவருக்கு கொடுத்து உதவுவது வரை அவ்வளவு நட்பு.இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் இரவு மாலா வீட்டிற்கு விமலா வந்தாள்.வா…விமலா! என வரவேற்றாள் மாலா.“எனக்கு…

Read More

65-தோற்பன தொடரேல்தேவாவிற்கு பந்து விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.விளையாட்டு என்றால் உட்சாகமாக இருப்பவன்,படிக்கச் சொன்னால் அதில் அதிகம் கவனம் செலுத்த மாட்டான்.தேவாவின் அம்மா, அப்பாஇருவருக்கும் மகனை நல்லா படிக்க வைத்து அரசுப்பணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்.தேவாவின் மதிப்பெண் வரும் போது எல்லாம் அம்மாவிடம் திட்டு, அடி…. பின் அப்பாவிடம் அடி!…வாங்கி…வாங்கி உடல்வலியை விட மனவலிஅதிகமாகி விட்டது.ஒரு நாள் அம்மாவிடம் தேவா கூறினான்.அம்மா! என்னை படி…படிஎன்று கட்டாயப் படுத்தாதீர்கள். எனக்கு விளையாட்டில் தான் ஆர்வம். அதில் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன் என்றான் நம்பிக்கையுடன். வாயடைத்துப் போனவள்,பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக விளையாட்டுப்பிரிவில் சேர்த்து விட்டார்கள் தேவாவை.அவன் பள்ளியில் வெற்றி பெற்று, இன்று மாநில அளவில் வெற்றி பெற்று,இந்தியா நாட்டுக்காக விளையாடப் போகிறான்.“தோற்பன தொடரேல்” என்று ஔவையார் கூறி இருக்கிறார். தேவா எடுத்த தெளிவான முடிவால் அவன் பெற்றோருக்கும் பெருமை, நாட்டிற்கும் புகழ் சேர்க்கிறான்.

Read More

முதன்மை என்ற அகரமே தமிழ்!முருகன் என்ற வெற்றியே தமிழ்!முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்!முடியும் என்ற நம்பிக்கையே தமிழ்!உருக்கம் என்ற அன்பே தமிழ்!உறுதி என்ற வேரே தமிழ்!உயர்வு என்ற கனியே தமிழ்!உழைப்பு என்ற வேர்வையே தமிழ்! நல்வினை என்ற தவமே தமிழ்!நல்லறம் என்ற ஒழுக்கமேதமிழ்!நன்மை என்ற மேன்மையே தமிழ்!நட்பு என்ற நட்சத்திரமே தமிழ்!பரிதி என்ற ஒளியே தமிழ்!பரிசு என்ற கொடையே தமிழ்!பரிட்சை என்ற ஆராய்ச்சியே தமிழ்!பண்பு என்ற பரிவே தமிழ்!அகல் என்ற விளக்கே தமிழ்!அகக்கண் என்ற ஞானமே தமிழ்!அடித்தளம் என்ற திடமே தமிழ்!அடக்கம் என்ற அறிவே தமிழ்!விருத்தி என்ற சித்தியே தமிழ்!விரித்தல் என்ற விளக்கமே தமிழ்!விழிப்பு என்ற தெளிவே தமிழ்!பராபவ என்ற புத்தாண்டே வருக!

Read More

அன்று அமாவாசை! கமிஷனர் உத்தரவுப்படிபோலீஸ் படை கிளம்பியது!ஒரு பிரிவு, நகரில் உள்ள பெரிய கடையை நோக்கி சென்றது!நகர எல்லையில் உள்ள தொழிற்சாலைக்கு, மற்றொரு பிரிவு சென்றது!தொழிற்சாலையை சுற்றிலும் மரங்கள் நிறைந்து இருந்தன!போலீஸ் படை சுற்றி வளைத்துக் கொண்டது!இரவு! காரின் விளக்குகளால்கண்கள் கூசியது!இரண்டு மூடிய லாரிகள்வந்து நின்றன!அதில் இருந்து ஆட்கள் குதித்தார்கள்!தொழிற்சாலை கதவுகள் திறக்கப்பட்டன!அப்பொழுது….விசில் சத்தம் காதை பிளந்தது! வாட்ச்மேன் உஷார் ஆகி விட்டான்!அருகில் இருந்த பொத்தனை அழுத்தினான்!அபாயமணி அலறியது இதற்குள்….ரிங்….ரிங்…. ரிங்…போலீஸ் நெருங்கியது!வாட்ச்மேன், முதல் பலி ஆனான்!ஆ…. டுமீல்….வானத்தை நோக்கி சுட்டார்கள்!டுமீல்…. டுமீல்…டுமீல்..ஐயோ…போலீஸ்!..பொம்மைகளைத் தூக்கி போலீஸ் மீது வீசினார்கள்!கமிஷனர் முன்னே வந்தார்!டுமீல்…டுமீல்…கமிஷனர் எச்சரிக்கை செய்தார்!யாரும் தப்பி, ஓடவோ,தாக்கவோ முயற்சிக்கவேண்டாம்!இங்கிருந்து ஒரு துரும்பு கூட வெளியேற முடியாது.கையில் உள்ள ஆயுதங்களை எறிந்து விட்டு….சரண் அடையுங்கள்!அப்பொழுது…‘தள தள’ என கொதித்துக்கொண்டிருந்த பொம்மைகுழம்பை கமிஷனர் மீது கொட்ட ஒருவன் முயற்சி செய்தான்!டுமீல்…. அம்மா….சுருண்டு விழுந்தான்!அனைவரும் கைது செய்யப் பட்டார்கள்! அதே நேரத்தில்….விற்பனை கடை விளக்குகள் ‘பளிச்’என…

Read More