வாடி நிற்கும் பக்தர்க்கு- முருகன் கோடி நலம் தரும்பாலன் நாடி வரும் பக்தருக்கு- முருகன் தேடி வந்து அருள்வான்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
பால் வடியும் முகம் -முருகா வேல் வெற்றி கொடுக்கும் மால் மகளை மணந்தாய் -முருகா தோல் மயிலில் அமர்ந்தாய்
கார் மேகம் மழை- கொடுக்கும் மார்கழி மாதம் பனிபெய்யும் பார்த்த சாரதி மருமகன்-நீ பார் முழுவதும் புகழிருக்கும்.
மலர் தூவி மனம்- மகிழும் வலம் வந்து வணங்கிநிற்கும் நலம் யாவும் உன்- அருளால் குலம் காக்கும் குடிக்காக்கும்.
உமையவள் வேலால் வெற்றி -வரும் படைவீடு காத்து நிற்கும் தடைகள் எல்லாம் தகர்த்து -செல்லும் கொடை உள்ளம் காத்து நிற்கும்.
2-இலிங்கேற்ப மூர்த்திபிரம்மாவிற்கு 2000 சதுர்யுகம் ஒரு நாள் ஆகும். அவர் நாள் கணக்குப் படி துயிலச் சென்றார். புயல் வெள்ளம் தோன்றி கடல் பெருக்கல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் அழிந்தது. திருமால் ஒரு ஆல் இலையில் மேல் குழந்தை வடிவில் நித்திரை செய்தார். முனிவர்கள் திருமாலை வணங்கினர். துதிப் பாடல் கேட்டு விழித்த திருமால் பழைய உலகை தேடத் தொடங்கினார். அது பாதாளத்தில் அமிழ்ந்து இருந்ததைக் கண்டார். வராக உருக் கொண்டு பாதாளம் சென்று தனது கொம்பினால் குத்தி எடுத்து வந்து முறைப்படி நிறுத்தியவர் பாற்கடலில் படுத்து யோக நித்திரையில் இருந்தார். ஆயிரம் சதுர்யுகம் கழியப் பிரம்மா இரவு காலம் நீங்கி, பகல் காலம் தொடங்கக் கண்விழித்து உலகை பார்த்தார். தேவர்கள், மனிதர்கள், செடி, கொடிகள் முதலியவற்றை படைத்தார். பூலகங்களையும், தேவ உலகங்களையும் திரட்டி இந்திரனை அரசர் ஆக்கினார். திருமால் யோக நித்திரையில் திருப்பாற்கடலில் இருப்பதைக் கண்டு எழுப்பினார் நீ…
அலை கடலும் வணங்கி- வரும் மலை மகளும் காட்சிதர தலை வணங்கி ஆசி- பெற உலைக் களமாய் மனமுருகும்.
திருச்செந்தூர் சூரன் சம்ஹார -விழா வரும்பக்தர் கூட்டம் கண்டால் கருணை கந்தன் மனம்- புரியும் தரு கற்பகமாய் வளரும்.
ஆறுபடை வீட்டில் முருகன் -அன்பு வேறுபாடு இன்றி அருள்வான்! மாறுபட்ட கருத்து கொண்டதால் -அசுரன் கூறு பட்டுப் போனான்.
காவடி ஆடும் சாலையில்- மனம் சேவடி பாடி மகிழ்ந்திடும் பாவடி தரும் ஞானத்தில் -முருகன் காவடி தூக்கியே ஆடிடுவோம்.