57-திருமாலுக் கடிமைசெய் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்த மாலா, அன்று மாலை தனது மகன், மகள்களை அழைத்துக் கொண்டு சீனிவாசப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல தயார் ஆனாள். அப்போது பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளிடம் முன்பை சொல்லி இருந்தாள். கோயிலுக்குச் செல்வோம் என்று. பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமிகளும் தயாராகி விட்டார்கள்.மாலா எல்லோரையும் அழைத்துக் கொண்டு சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு நடந்து சென்றார்கள். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோயிலில் கூட்டமாக இருந்தது. வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு முன்பே வந்த சில வயதான பெண்கள் கோயிலின் பின்புறம் உள்ள துளசித் தோட்டத்தில் துளசி, மலர்களைப் பறித்து மாலையாக கட்டிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த சிறுவர்கள், இவர்கள் பூ கட்டுப்பவர்களா? என்று கேட்டனர். இவர்கள் திருமாலுக்கு பணி செய்ய வேண்டும் என்று உலவாரப் பணி செய்கிறார்கள். கோயிலைக் கூட்டி சுத்தம் செய்வது. தூப,தீப விளக்குகளை…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
7-காலமும் நேரமும் தாத்தா புடை சூழ சிறுவர்கள் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் மட்டும் அழுது கொண்டிருந்தான். அவனை அருகில் அழைத்த தாத்தா, “ஏன் அழுகிறாய்” என்று கேட்டார். அவனும் அழுது கொண்டே, “தாத்தா…. தாத்தா.. எங்க அம்மா எப்ப பார்த்தாலும் அசடு, சோம்பேறி என்று திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ம்…ம்..” என்று அழுது கொண்டு இருந்தான்.“ சரி கண்ணா… அழுவதை நிறுத்தினால் உனக்கு ஒரு கதை சொல்வேன். என்றவுடன் “சரி தாத்தா” என்றவன் அழுகையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து ஆர்வத்துடன் தாத்தாவைப் பார்த்தான். தாத்தா கதையை ஆரம்பித்தார்… “சிறுவர்களே ஒரு ஊரில் ராமன் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு உரிய வயதில் அவன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். வேலை, வெட்டிக்கு போகாமல் அம்மா, அப்பா விட்டுச்சென்ற சொத்தை வைத்து காலத்தை கழித்து வந்தான் ராமன். இருந்த சொத்து எல்லாம் மெல்ல, மெல்ல கரைந்து போனது. வீடு ஒன்று தான்…
அமெரிக்காவில் எழுதிய கவிதைகள். அமெரிக்கா கங்கை 1-பள்ளி நீரோடையில் பளபளக்கிறது காசு.2-வானம் பூத்தது மரங்கள் மௌனமாக சலசலக்கும் நீர்.3-நீள வானத்தில் மேகம் தவழ்ந்தது சூரிய வரவு.4-குலுங்கி குலுங்கி சிரித்தது குழந்தை நடந்ததால் கொலுசு மணி. 5-மேகம் நீர் கொடுக்க அணை தேக்கி வைக்க பசுமைப் புரட்சி. 6-ஓடும் தண்ணீர் உயர்ந்த மரங்கள் கண்ணுக்கு விருந்து.7-மடை திறந்த வெள்ளம் மகிழ வைக்கும் மரங்கள் காட்டு வளம். 8-விண் விளையாடியது மண் குளித்தது மரம் நடனமாட.9-புல்லின் வருகைக்கு பன்னீர் தெளித்தது கோடை மழை. 10-மிருகங்களைப் பார்க்க மனிதக் கூட்டம் அன்னையர் தினம். தொடரும்கவிஞர் ச. மல்லிகா
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் ராமு குடும்பத்துடன் கொடிவெறிக்குச் சென்றார்கள். தங்கள் உடமைகளை ஓரிடத்தில் வைத்துவிட்டு. ராமு, அவன் மனைவி ராதா, மகள் மலர், மகன் ரவி எல்லோரும் கொட்டும் நீரில் குளித்து உடல் சிலிர்த்து, குதூகலம் அடைந்தவர்கள். மீண்டும்.. மீண்டும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு குளித்து குளித்து மகிழ்ந்தனர். பின் உடை மாற்றிக் கொண்டு வந்தார்கள். தாங்கள் எடுத்து வந்த புளியோதரை, தயிர் சாப்பாட்டை இலையில் வைத்து எல்லோருக்கும் அம்மா கொடுத்துக் கொண்டு இருக்கும் போது… ஒரு வயதான மூதாட்டி அருகில் அமர்ந்து இருப்பதைப் பார்த்த அம்மா! ஒரு இலையில் சாப்பாடு, காய்கறி இவற்றை வைத்து அந்த வயதான அம்மாவிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். அந்த வயதான பாட்டியும் முகம் மலர நல்லா இருமா என்று சொன்னபடி சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டார்கள். அம்மா அந்தப் பாட்டி சாப்பிடவில்லை என்பதை எப்படி அம்மா தெரிந்து கொண்டீர்கள் என்று…
உம்.. உம்…ம்.. ம் என ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த தாத்தா, “ஏன் அழுகிறாய்” என்றார் அன்புடன். “தாத்தா…ம்.. ம்.. என பேச்சு வராமல் அழுதாள்” சிறுமி. “தாத்தா இவள் வைத்திருந்த நெல்லிக்காய் ஒன்றை அவள் எடுத்து தின்று விட்டாள். அதற்கு அந்த நெல்லிக்காயே வேண்டும்” என அழுது கொண்டு இருக்கிறாள். என்று மற்றொரு சிறுமி கூறினாள். “இதற்கா அழுகிறாய். உனக்கு ஒரு கதை சொல்லுகிறேன் கேள்”. என்றவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் மரகதம் என்ற ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு சரவணன் என்ற ஒரு மகன் இறந்தான். அவனை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தாள். அவனும் பெரியவன் ஆனான். நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். அவளும் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நல்ல மருமகளாய் நடந்து கொண்டாள். இவர்களுக்கு நிலம், தோட்டம் எல்லாம் இருந்தது. விளைச்சலுக்குப் பஞ்சம் இல்லை. ஒரு தோட்டத்தில்…
கலா என்று அழைத்தார் ஆசிரியர். எழுந்து ஆசிரியரிடம் சென்றாள் கலா. வீட்டுப் படத்தை ஒழுங்காகச் செய்யாமல் பாதியில் விட்டு இருக்கிறாய் என்றார் ஆசிரியர். டீச்சர் எழுதுவதற்கு நேரம் போதவில்லை என்றாள் கலா. ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் என்றார் ஆசிரியர். 24 மணி நேரம் என்றாள் கலா.எல்லோருக்கும் அதே நேரம் தானே! உனக்கு மட்டும் பத்த வில்லையா? என்ற ஆசிரியர். கலாவைப் பார்த்தார்.கலா படிக்க வேண்டிய நேரத்தில் விளையாடிவிட்டு வீட்டுப் பாடத்தை அவசர…அவசரமாக எழுதி, பாதியில் விட்டுவிட்டாள், அதன் விளைவுதான் ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டாள். கலா எந்த…எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ? அந்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் படுவதே அதற்கு காரணம். அவளுக்குத் தெரிந்தும் அதை மாற்றிக் கொள்ள முடியாமல் அவளுடைய சோம்பல் தடுக்கிறது. இதைத்தான் புலவர் ஔவையார் பாட்டியும் முன்பே, சொல்லி இருக்கிறார்கள் “சோம்பித் திரியேல்” என்று.
அத்தரி பாச்சா கொழுக்கட்டை “தாத்தா…. தாத்தா இங்கே பாருங்கள். இவன் கடைக்கு போகவில்லை என்று இவனது அம்மா எப்படி அடித்திருக்கிறார்கள் பாருங்கள் தாத்தா” என்றனர். பாவம் இவன் முதுகு எல்லாம் வீங்கி கிடைக்கிறது. என்றான் ஒரு சிறுவன்.” அப்படியா… நீ அம்மா சொன்னதை கேட்டிருக்கலாம் இல்லையா?” கேட்டிருந்தால் இந்த அடி விழுந்திருக்காது அல்லவா?” என அன்புடன் வினாவினார் தாத்தா. “சரி உனக்கு ஒரு கொழுக்கட்டை கதை சொல்கிறேன் கேள்” என்றவர் சொல்ல ஆரம்பித்தார். “ஒரு ஊரில் மைதிலி, முரளி என்ற தம்பதிகள் இருந்தார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆனது” ஒரு நாள் மைதிலி …தன் கணவனிடம் எங்க ஊருக்குப் போய் அம்மா, அப்பாவை பார்த்து வரலாம். எனக்கு அவர்கள் நினைவாக இருக்கிறது என்றாள். புது மனைவி ஆசைப்பட்டு விட்டாளே என்று முரளியும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் ஊருக்குச் சென்றான். மகள், மருமகனைப் பார்த்த மாமனாரும்,…
3-மருமகனும் உரலும் அப்பளக் குடுமி தாத்தா அரச மரத்தடியில் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சுற்றி சிறுவர், சிறுமிகள் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தாத்தா எல்லோருக்கும் தான் கொண்டு வந்த கடலையை கொடுத்தார். எல்லோரும் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு சிறுவன் மட்டும் வேண்டாம் என்கிறான். தாத்தாவும் விட்டுவிட்டார். தாத்தா கொடுக்கும்போது வேண்டாம் என்றவன் சிந்திய ஒரு கடலையை எடுத்து சாப்பிட்டான். இதை தாத்தா பார்த்தார். உடனே, “மருமகன் உரலை நக்கிய கதையாக’ இருக்கிறது என்றார். குழந்தைகள் எல்லாம் “அது என்ன தாத்தா அந்த கதையைச் சொல்லுங்கள்” என்று எல்லோரும் கத்த ஆரம்பித்து விட்டார்கள். “குழந்தைகளே! அமைதி… அமைதி” என்று எல்லோரையும் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டு தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் கணவன், மனைவி இருவரும் வாழ்ந்து வந்தார்கள் .அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அகிலா என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். அவளும் பெரியவளாகி பருவ…
2-தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அப்பளக் குடுமி தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெரிய பையன் விரல் சூப்பிக் கொண்டு இருந்தான். இதைக் கவனித்த தாத்தா “சிறுவர்களே, இங்கே வாருங்கள் கதை சொல்லப் போகிறேன்!” என்றவுடன் எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் ரவி, மணி, குமார் என்று மூன்று நண்பர்கள் இருந்தார்கள். மூன்று பேருக்கும் தனித்தனியாக ஒரு குணம் உண்டு. ரவிக்கு எப்போதும் கண்ணில் பீளை வந்து கொண்டே இருக்கும். அதில் கொசுக்கள் வந்து உட்காரும் அதை இரு கைகளிலும் அடித்துக் கொண்டே இருப்பான். மணியின் இரு கைகளிலும் எப்போதும் சிரங்கு இருந்து கொண்டே இருக்கும். அரிப்பு தாங்க முடியாமல் சொறிந்து கொண்டே இருப்பான். குமாருக்கு எப்போதும் மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். அதை சிந்திக் கொண்டே இருப்பான். இப்படி மூன்று பேரும் மாறி மாறி அவர்கள் செய்வதை செய்து…
ஆத்திசூடி கதைகள்53- சொற் சோர்வு படேல் ரயில் ஓடிக் கொண்டு இருந்தது. சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த பெண்மணி தனது உறவினருடன் பேசிக்கொண்டு வந்தார். குடும்ப நிகழ்வுகளை அப்படியே சொல்லி மன வருத்தம் கொண்டும் அருகில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் ஓடும் ரயிலில் உரத்த குரலில் பேசிக்கொண்டு வந்தார்கள். நீண்ட நேரம் பேசிய பின் அலைபேசியை வைத்தவர்.எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணைப் பார்த்தாள். எதிரில் இருந்த பெண் கேட்டார்கள் உங்கள் பையன் வீட்டில் இருந்து வருகின்றீர்களா? என்று ஆமாம்! என்றவர் மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டார்.கணவர் இறந்து விட்டார். மகன் வீட்டில் இருக்கிறேன்.வேலைகளை எல்லாம் தாமே செய்வதாகவும், மருமகள் செய்வது சுத்தமாக இருக்காது என புகார் பட்டியல் வாசித்தவர். அவர்கள் புகைப் படங்களையும் காண்பித்தார். நல்லா இருக்கட்டும் என்ற எதிர் அமர்வில் இருந்த பெண். உங்களை மகன்கள் பார்த்துக் கொள்கிறார்களே! என சந்தோசம் அடையுங்கள். எத்தனையோ…