Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

62- தேசத்தோ டொத்துவாழ் வரலாறு பாடம் நடத்தினார் ஆசிரியர். நமது இந்தியா நாடு பலமொழி பேசினாலும், பல மதங்கள் இருந்தாலும் சுதந்திரம் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றுபட்டதால் அடிமை விலங்கை உடைத்து எழுச்சி கொண்டு சுதந்திரம் பெற்றோம். இன்று இந்தியா மதிக்கப் படுகிறது என்றால் தேச ஒற்றுமை, பண்பாடு, கலாச்சாரம் முக்கிய காரணம். “காந்தி தாத்தா” என அன்போடு வழிவழியாக அழைக்கிறோம் என்றால்… மகாத்மா காந்தியைத்தான். அகிம்சை வழியில் ஒன்று சேர்த்தவர். “தேசத்தோ டொத்துவாழ்” என ஔவையாரும் கூறிச் சென்று இருக்கிறார். என ஆசிரியர் சொன்னதை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் மாணவர்கள். ஆசிரியரும் தொடர்ந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.

Read More

60- தூக்கி வினை செய் செல்விக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம். அவள் இருப்பதோ சின்ன கிராமம். ஒரு மையில் தூரத்தில் பள்ளிக்கூடம் இருந்தது. செல்வி படிப்பின் மேல் கொண்ட ஆசையால் நடந்து சென்று படிக்க ஆரம்பித்தாள். பத்தாம் வகுப்பு முடித்து விட்டாள். மேலும், படிக்கச் செல்லும்போது வகுப்புக்கு பாடம் நடத்த முடியுமா?என்று தலைமை ஆசிரியர் கேட்டார். செல்விக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால். உடனே, சரி என்று சொல்லி விட்டாள் செல்வி. படித்துக் கொண்டே பாடங்களை சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் ஆகி விட்டாள் செல்வி. அந்த கிராமத்தில் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் பற்றாக் குறையே காரணம். இன்று… செல்வி பட்டதாரி ஆசிரியர் ஆகி படித்த பள்ளிக் கூடத்திலேயே ஆசிரியர் ஆகிவிட்டாள். இதைத் தான் புலவர் ஔவையார் “தூக்கி வினை செய்” என்று கூறியிருக்கிறார்.

Read More

மேகம் பிளந்தால் தான் மழை பொழியும் மண் பிளந்தால் தான் பயிர் வளரும் விதை பிளந்தால் தான் செடி முளைக்கும் இவை அதிசயம், கடவுள் தந்த பரிசு என்றால் தன் உடல் பிளந்து ஓர் உயிரை தரும் பெண் அந்த கடவுளுக்கே கிடைத்த பரிசு பெண் என்பவள் பிறப்பை தர பிறந்தவள் அல்ல அவள் இந்த உலகிற்கு சிறப்பை தர பிறந்தவன் தன் சக்தியை தானே அறியா ஆணைப் போன்றவள் பெரும் புயலையும் தாங்கி சிறு புன்னகைத்து செல்வாள் எத்துயர் வந்தாலும் தளராது நிற்கும் நாணல் அவள் வெடித்து சிதற ஆயிரம் எரிமலையே உள் இருந்தாலும் சிறு அலையாய் காலைத் தொடும் அக்கடல் போன்றவள் பெண்ணின் பெருமையை இவ்வுலகம் உணர வேண்டும் பெண்ணின் வலிமையை இவ்வுலகம் அறிய வேண்டும் இதுவே பெண்ணினத்தின் நீண்ட கால கோரிக்கை பெண் என்றால் புன்னகை மட்டும் அல்ல அவள் பொறுமை கடலை விட ஆழம் அவள்…

Read More

சாதிக்கப் பிறந்தவள் குழந்தையாய் துள்ளித் திரிந்தவள் குமரியாய் கனவு கண்டவள் மருமகளாய் வரும் போது மகிழ்ச்சி மருட்சியுடன் வருகிறாள்.குடும்பத்தில் உள்ளவர் குணங்களை குறுகிய நாளில் புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்ல தயாராகிறாள். குடும்ப நன்மைக்காக ஆழமாக சிந்தித்து குறைகளை நிறையக்கி குதூகலப் படுபவள் இம்சை படுத்தினாலும் அவர்கள் இடத்தும் இரக்கம் காட்டி இழுத்துப் போடுபவள். சலிக்காமல் உழைத்து சகசமாக இருப்பாள் சங்கடங்கள் தீர்க்கும் மூலிகையாய் இருப்பாள் மங்கல கரமாக எப்போதும் இருப்பாள் குத்து விளக்காய் பிரகாசிப்பாள் கோபமாக பேசுவாள் குணமாக பேசுவாள் குற்றம் சாற்றுவாள் குறைகளை சுட்டிகாட்டுவாள் சுற்றத்தாருடன் நட்புடன் இருக்கச் செய்வாள் உறுதியான மனம் படைத்தவள் சாதிக்கப் பிறந்தவள். மகளிர் தின நல்வாழ்த்துக்கள், செந்தமிழ்வாணி டாக்டர் ச. மல்லிகா, 8.3.2026.

Read More

11-வண்ண மரங்கள் பூத்து மலர்ந்தது கோடை காலம். 12- உரைந்த பனி உதிக்காத சூரியன் பனிக் காலம். 13- வண்ண ஓவியம் தீட்டியது வானம் மாலை நேரம்.14- ஏரிவிட்டு ஏரிக்குப் பறந்தது…. வாத்து. 15- விண் முட்டியது கீச்.. கீச்.. சங்கீதம் வெட்டாத மரம்.16- ஒற்றைக் காலில் தவம் செய்தது செங்கால் நாரை.17- புத்தகம் இல்லாத பை படிக்கப் போகும் மாணவர் அமெரிக்கா கல்வி.18- ஊஞ்சலாடும் உணவு பறவைகளின் சாப்பாட்டுக் கூடம்.19- அன்புடன் பகிர்ந்து உண்ணும் பறவை கூட்டம்.20- பழமையான வீடுகள் வண்ண மயமாய் ஓவியத்தில். மலரும்.

Read More

ஆத்திசூடி கதைகள் 59- துன்பத்திற் கிடங்கொடேல் உடல் பயிற்சி வகுப்பு. அந்த வகுப்பில் தோட்ட வேலைகளையும் செய்வார்கள். அன்று ஆசிரியர்! மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிக்கூடத் தோட்டத்தை சுத்தம் செய்து தண்ணீர் விடும் வேலைகளைப் பிரித்து குழுவாகச் செய்யச் சொன்னார். பாபுவுக்கு தண்ணீர் விடும் வேலை கொடுத்தார் ஆசிரியர். ஆனால், பாபுவோ ரோஜா செடியில் உள்ள காய்ந்த இலைகளை எடுத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஆசிரியர், பாபு ரோஜா செடியில் உள்ள முள் குத்திவிடும். நீ தண்ணீர் மட்டும் ஊற்று என்றார். சரி சார் என்ற பாபு தண்ணீர் எடுக்க சோம்பல் பட்டுக்கொண்டு ரோஜா இலைகளை கிள்ளி கொண்டு இருந்தான். அவன் எதிர்பாராத விதமாக கையில் முள் குத்தி விட்டது. அதிலிருந்து ரத்தம் வந்தது. அதை கவனித்து விட்ட ஆசிரியர். முன்பே சொன்னேன் அல்லவா! என்றவர், முதலுதவி செய்தவர்…“துன்பத்திற் கிடங்கொடேல்” என்று ஔவையார் கூறி இருக்கிறார். எளிமையான வேலையை கொடுத்தால் முள்…

Read More

எதிரில் கூடாரம் அடித்து தங்கி இருக்கும் பகைவர்கள் பாசறை தெரிந்தது. வழியில் கரை புரண்டு ஓடும் ஆறு ஆழம் நாலடி இருக்கும் குதிரை அதில்இறங்கி நீந்தி கடந்தது. ராமன் இடுப்பில் கட்டப்பட்ட நூல் கயிறு நீரில் நனைந்ததால் இறுகி வேதனை அளித்தது. குதிரையை நிறுத்த என்ன செய்வதென்று யோசித்தால் ராமன். இரண்டு பனை மரங்களுக்கிடையே குதிரை போகையில் அதை இரு கைகளாலும் பற்றிக் கொண்டால் குதிரை நின்றுவிடும். என எண்ணி கெட்டியாகப் பிடித்தான். மழையிலும், புயலிலும் வேர்கள் நைந்திருந்த அந்த மரங்கள் கையோடு வந்துவிட்டன. கையை விட்டால் மரங்கள் அவன் மேலே சாய்ந்து அதோ கதிதான். அதனால், மரங்களை விடவும் முடியாமல், குதிரையையும் பிடிக்க வழி இல்லாமல் இருந்ததால் துன்பம் பொறுக்க முடியாமல் ‘அப்பா’ ‘அய்யா’ என்று கத்திக்கொண்டு சென்றான் ராமன். இவனுக்கு துணையாக வந்த படைகள் வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்தன. சில படை வீரர்கள் இவனை நெருங்க முடியா…

Read More

ராமனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு அரசனால் முடியாதது நம்மால் எப்படி ஆகும்? கமலாவின் தொல்லை தாங்க முடியாமல் ஏதோ பொய் சொல்லி வந்தால் இப்படி ஆகிவிட்டதே! இன்னும் ஒரு வாரத்தில் கண் இல்லாமல், மூக்கு இல்லாமல் தவிக்கப் போகிறேன். இப்பவே கமலா பிடுங்குகிறாள். கண்ணும், மூக்கும் போய்விட்டால் நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. ராமனுக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை அரண்மனை நந்தவனத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதை சுற்றி பெரிய மேடை, அந்த மேடையில் அமர்ந்து கண்ணே, மூக்கே உங்களுக்கு ஆபத்து என்று புலம்பிக் கொண்டிருந்தான். அப்படியே களைத்து உறங்கி விட்டான். அரை, குறை தூக்க மயக்கத்தில் கண்ணி,மூக்கி உங்களுக்கு ஆபத்து என்று உளறிக் கொண்டிருந்தான். கண்ணம்மா, மூக்காயி என்ற இரண்டு அரண்மனை வேலைக் காரிகள் உள்ளனர். தங்கக் கோப்பைகளைத் திருடியவர்களும் அவர்களே. அவர்கள் இருவரும் சாமர்த்தியமாய் திருடி அதை இதுவரை தெரியாமல் ஒளித்து வைத்திருந்தனர். ராமன் உளறிக் கொண்டிருந்த…

Read More

ராமன் இவ்வாறு கூறியதும் குடியானவனும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். அன்று இரவு ஊரடங்கியது. பிறகு ராமன் குடியானவன் தோட்டத்திற்கு போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றான். கிணற்றிலிருந்து நீர் இறைத்து விடிய விடிய ஊற்றினான். ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்தவுடன் வீட்டிற்கு வந்து படுத்து விட்டான். மனைவி “பூஜை முடிந்ததா? “ என்றாள். ராமனும் முடிந்தது என்றான்.விடிந்த பின் தோட்டத்திற்கு வந்து பார்த்த குடியானவன் திகைத்துப் போனான். அவன் வயலில் மட்டும் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது. மகிழ்ச்சியோடு உழுது, பயிர் செய்தான். காலத்தே மழையும் பெய்யவே நல்ல விளைச்சல். ராமனுக்கும் சொன்னபடி நெல் கொண்டு வந்து கொடுத்தான். கொஞ்ச நாட்கள் கமலா பேசாமல் இருந்தாள். மறுபடியும் வருமானம் இல்லாமல் போகவே, அவள் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்தாள். அவர்கள் இரக்கப்பட்டு தங்கள் வீட்டின் ஒரு பகுதியில் குடியிருக்க வைத்தார்கள். ஒரு நாள் கமலா ராமனிடம் “நீங்கள் பாடி ஜோசியம் சொன்னால் உங்களைத்…

Read More

58- தீவினை யகற்று சித்ராவும், சசியும் தோழிகள். அவர்கள் வீட்டிற்கு அருகில் ஒரு தோட்டம் இருந்தது.அங்கு சிறுவர், சிறுமிகள் சென்று விளையாடுவார்கள். தோட்டத்துக்காரர் சிறுவர்கள் விளையாடட்டும் என்று விடுவார்கள். அங்கு ஓடிப் பிடித்து, கண்ணாமூச்சி, நொண்டி விளையாடு வார்கள். ஒரு நாள் விடுமுறை என்பதால் சித்ராவும், சசியும் நொண்டி விளையாடிவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தும்பி, பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த சசி மெதுவாகச் சென்று தும்பியை பிடித்தாள். அதன் வால் முனியில் பக்கத்தில் கிடந்த நூலை எடுத்து கட்டி பறக்க விட்டு சந்தோசப்பட்டாள். தும்பி நூல் இருந்த தூரம் பறந்து, பின் பறக்க முடியாமல் துன்பப் பட்டது. இதை கவனித்த சித்ரா, சசி பக்கத்தில் வந்து தும்பி கட்டி இருந்த நூலை வாங்கினாள். சசியும் தும்பி கட்டி இருந்த நூலை கொடுத்தாள். சித்ரா தும்பி முனையில் கட்டி இருந்த நூலை எடுத்துவிட்டாள். தும்பி பறந்து…

Read More