86-பொருடனைப் போற்றி வாழ்
திவ்யா மதிய உணவு உண்ட பின் கை கழுவச் சென்றாள்.
குழாயைத் திருகி கை, கால் என கழுவுவதற்கு அவ்வளவு தண்ணீரை வீண் செய்தாள்.
அவள் பின்வந்த திலகா நிற்பதை கவனித்தும் தண்ணீரை விட்டு வரவில்லை.
திவ்யா! போதும் கை கழுவியது. தண்ணீரை எப்படி சிக்கனமாக செலவு செய்கிறோமோ, அது போல் தான் பணத்தையும் செலவு செய்வோம் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள்.
தண்ணீரை எவ்வளவு வீண் செய்கிறாய் என்றாள் திலகா.
அவள் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்
திவ்யா.
குழாயில் வரும் தண்ணீரை சிறிது செய்து கையை கழுவிய திவ்யா மூடிவிட்டு வந்தாள்.
நமக்கு கிடைக்கும் செல்வத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது அதை சிறிது சேமித்து எப்போதும் நம்மிடம் பொருள் இருக்கும்படி இருக்க வேண்டும் என்று ஔவையார் சொல்லி இருக்கிறார்கள் என்று அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது திலகாவிற்கு. “பொருடனைப் போற்றி வாழ்’ என்று ஔவையார் சொன்னதன் அர்த்தம் இவளுக்கு எங்கே புரியப் போகிறது. என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் திலகா.