குறள் சுவை அறிவோம் 5.இல்வாழ்க்கை 41.இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை . இல்லறத்தில் வாழ்பவர்கள் தகுதி உடைய மூவர் இல்லத்து மூத்தவர்களை ,மகளீர்களை மதித்தும் , வாழ்க்கை துணைவியுடன் மக்களுக்கு உதவி வாழவேண்டும். 42.துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை . துறவறம் பூண்ட சந்நியாசிகள், வலிமை அற்ற நோயாளிகளுக்கு உதவுதல், குடும்பத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தல் ,இவைகளை இல்லத்து துணையுடன் செய்து வாழ வேண்டும். 43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. தென்பகுதியில் வாழும் மக்கள் ஐம்புல அடக்கத்தில் தெய்வவழி பாட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.தீயவற்றில் இருந்து விலகி விடுகிறார்கள்., அனைவரையும் உபசரித்து அன்பு காட்டுவதால் பிறவி துன்பம் வராமல் காத்துக் கொள்கிறார்கள்.எனவே,அவர்கள் வாழ்வு சிறப்புடையதாகிறது. 44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். வசை சொல்லுக்கு அஞ்சி தன் துணையுடன் மட்டுமே வாழும் இல்லத்தான் வழிதவறி எந்தக்…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
வெளிநாட்டு மூலிகை ஒற்றுமை-வேற்றுமை நம் நாட்டில் உள்ள ஒரு பொருளைப்பற்றி வெளிநாட்டினர் ஆய்வு செய்து கூறினால் தான் நாம் அதை சிறப்பு வாய்ந்ததாக ஏற்றுக்கொள்வோம். வெளிநாட்டில் அமெரிக்கர்கள் மூலிகை தாவரங்களை உணவாகவே பயன்படுத்துவதை காண முடிந்தது. அவர்கள் பயன்படுத்தும் மூலிகை மரங்கள் செடிகள் இவற்றில் சிலவற்றை எடுத்துக்காட்டாக பார்க்கலாம். அரசமரம், வேப்பமரம் அரசமரம், வேப்பமரம் இரண்டும் நிழல் தரும் மரங்கள் ஆகவும் இல்லத்திற்கு காற்று தருவதற்காகவும் வளர்த்து இருக்கிறார்கள். இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாடு இந்தியாவில் உள்ள மரங்களின் இலை பெரிதாக இருக்கும். அமரிக்காவில் உள்ள மர இலைகள் சிறிய அளவில் இருக்கிறது. மேப்பிள் ‘மேப்பிள்’ மரங்கள் அதிகமாக வீடுதோறும் வளர்க்கிறார்கள். மரக்காற்று உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.இந்த மரத்தில் பால் வடியும் தன்மை உண்டு. இதன் பாலை சேகரித்து சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை சேர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். சுத்திகரித்த பின்னர் தேன் போன்று சுவையுடன் உள்ளது.(ரொட்டிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் திரவ உணவாகப்…
கிருஷ்ணரின் கீதை பகுதி -18 ஞான யோகம் -தொடர்ச்சி குருவிடம் உபதேசம் பெற்றுக் கொண்டு தன் திறமையில் செருக்குக் கொள்பவருக்கோ, குருவைத் தவிர மற்றொருவரிடம் விசுவாசம் கொள்பவருக்கோ குரு கிருபையின் உண்மையான ஆசீர்வாதம் கிடைக்காது ஆனால் ,அர்ஜுனன் குருவாக ஏற்றுக் கொண்டதுடன் கிருஷ்ணனையே சரணாகதி அடைந்ததாகக் கூறுவதால் ,… பகவான் எவ்விதத்தில் உயர்ந்தவர் சக்தி படைத்தவர் என்று உணர்ந்து அவரிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்துக் கொள்வதைத் தான் ‘சரணாகதி’ என்றும் ‘ஆத்ம சமர்ப்பணம்’ என்றும் கூறுவர். சர்வ வல்லமை படைத்தவர் அனைத்தும் அறிந்தவர், அனைவர் உள்ளத்திலும் உறைபவர்,அளவற்ற நற்குணங்களின் கரையற்ற கடல்,எல்லாவற்றிற்கும் அதிபதி, தனக்கு வேறு புகலிடமில்லை. ஞானம், சக்தி, அன்பு இவற்றைக் கொடுக்க வல்ல இறைவனை நினைத்து அவருடைய திருவடிகளில் கிடத்தி விட்டு புத்திமதி கூறுங்கள் என்று பிரார்த்தனை செய்து கொண்டு தன் மனநிலையை வெளிப்படுத்தினான். எனது புலன்களை வாட்டுகின்ற சோகத்தை விலக்கி ,நான் எப்போதும் சுகமாக இருக்க வழி…
காலை நேரம் பரபரப்பாக இருந்தது..ரகுவை பல் விளக்க பல்பசையை எடுத்துக் கொடுத்தாள் ரமா. பல் விளக்க மாட்டேன்.பல் விளக்க மாட்டேன் என தலையை ஆட்டிய ரகு வெளியே ஓடினான். அவனைப் பிடித்து இழுத்து வந்த ரமா கட்டாயப்படுத்தி விளக்க ஆரம்பித்தாள்.’’அழுது கொண்டே தூ… தூ… என துப்பிக் கொண்டே அழுது கொண்டு இருந்தான் ரகு. ஒருவழியாக பல்விளக்கி ஆகி விட்டது. அடுத்தது குளிக்க வைக்க துணியை களைந்தால் ,வேண்டாம்..வேண்டாம் என குதித்தான் ரகு. ‘’நீயே குளி’’ என்ற ரகுவை , நல்ல பையனில்லை என சமாதானம் செய்து கொண்டே ஒரு வழியாக குளியல் வேலை முடித்து வெளியில் வரும்போது மணி 7.30. இன்னும் அரை மணிநேரத்தில் கிளம்பி ஆகவேண்டும், என்று அவசர…அவசரமாக பள்ளி சீருடை மாற்றி காலை சிற்றுண்டி ஊட்டி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வருவதற்கும் பள்ளிக் கூட பேருந்து வருவதற்கும் சரியா இருந்தது. பேருந்தில் ரகுவை ஏற்றிவிட்டு…