வெங்கு இன்னொரு பட்டனை அழுத்தினான்.

சி. ஐ. டி. இருந்த அறையின் கதவு திறந்தது!

ரகு உள்ளே வந்தார்!

வாய் சவடால் வீரர், சி. ஐ. டி. புலியே வருக!

தலைவருக்கு வணக்கம் சொல்!

வேண்டாம் வெங்கு! வழக்கமான போலீஸ் திமிர் இருக்கும்!

உத்தரவு கொடுங்கள் பாஸ்! திமிரை அடக்குகிறேன்!

வாய் கொழுப்பு நரிகளே!… உங்களுக்கு அழிவு நெருங்கி வருகிறது!

என்ன!… என்ன சொன்னாய்?

வெங்கு!அவசரப் படாதே!
நினைத்தால் நின்ற இடத்திலேயே சாம்பல்
ஆக்கி விடலாம்.

இப்போது போலீஸ் இவனை தேடுவதில் முனைந்துள்ளது! இந்த சந்தர்ப்பத்தில் நமது வேலையை முடித்து விட வேண்டும்!

எல்லாம் முடிந்த பின் இவனை…

ஆகா!… அபாரமான ஐடியா!

ஐடியா அபாரம் தான்!ஆனால்…

என்ன, ஆனால்…?

உங்களுக்கு சமாதி கட்டப்படுகிறது!…

எங்களுக்கா சமாதி கட்டப் போகிறாய்?

இந்தா, இதை வாங்கிக் கொள்!

வாங்கியதை உடனே திருப்பித் தருகிறேன்!
இது, அசல்….

கும்…கும்..

இது, வட்டி!  கும்… அம்மா…!

இது எப்படி இருக்கு?…

தம்பி, இதுதான் போலீஸ் அடி!… தெரிஞ்சுக்கோ!

வெங்கு ஆவேசத்துடன் எழுந்தான்.

அயோக்கிய நாயே!…

வெங்கு நிறுத்து!

மன்னிச்சுடுங்க, பாஸ்!
அடி தாங்க முடியாமல்
அவசரப்பட்டு விட்டேன்!

வெங்கு! சி. ஐ. டி. யை
தேடுவதில் போலீஸ்சார்
தீவிரமாக இருக்கிறார்கள்! இந்த நேரத்தில் நமது திட்டத்தை நிறைவேற்றுவது சுலபம்.

ஆமாம், பாஸ்!
உத்தரவிடுங்கள்! நமது ஆட்கள் காத்து இருக்கிறேன்!

சரியாக, இன்றிலிருந்து
9-வது நாள் அமாவாசை!
அன்று….

12-மணிக்குள் எல்லா சிலைகளும் வந்து விட வேண்டும்! விடிவதற்குள்
பொம்மைக்குள் ஏற்றி விட வேண்டும்!

ஒகே, பாஸ்!

எல்லா ஆட்களையும் தயாராக வைத்திரு!…

                        தொடரும்.

Share.

Leave A Reply