ஹைக்கூ கவிதைகள்

31-சூரியன் ஒளி பட்டு
     கரைகிறது
     பனிக்கட்டி.

32- வீடு தோறும்
      பச்சைக் கம்பளம்
      புல்வெளி.

33- பச்சை சீருடை    
      அணி வகுப்பு
      மரங்கள்.

34- நெழிந்து நெழிந்து      
     செல்கிறது
      பாம்பு ஏரி.

35- ஆமை போல்      
      செல்கிறது
      மேகம்.

36- கப்பல் செல்லும்    
      ஆழ்கடல்
      நயக்கரா ஏரி.

37- கொட்டும் அருவி
      வற்றாத தண்ணீர்  
      நயக்கரா ஏரி.

38- பசுமை புரட்சி   
     செய்கின்றது
     வெட்டாத மரங்கள்.

39- அடுத்தடுத்து கப்பல்
மேலே போய் வழிவிடும் துலுத் பாலம்.

40- பச்சோந்தி போல் நிறம் மாறுகிறது
இலை, பூக்கள்.
                           மலரும்.

Share.

Leave A Reply