ஏட்டு போனை வைத்தார்!
ரகு திரும்ப உள்ளே வந்தவர், வாசலில் நின்று
கொண்டு இருந்தார்.
சரிதான் பறவை இரையை உணர்ந்து விட்டது.
அவர் மெல்ல சிரித்துக் கொண்டே திரும்பினார்!
இரவு விடுதி ஒன்றில் மேல் நாட்டு இசை முழங்கிக் கொண்டு இருந்தது!
மங்கிய விளக்கில் அரைகுறை ஆடையுடன்
ஒருத்தி நடனம் ஆடிக் கொண்டு இருந்தாள்!
மற்றொரு மூலையில்…
வெங்கு மது போதையில்
ஒரு அழகியை அணைத்து தள்ளாடிக் கொண்டு இருந்தான்.
அந்த நேரத்தில்…
சே! நேரம் காலம் தெரியாமல்….!
மெல்ல அழகியை விட்டு
நழுவினான்.
அடுத்த அறைக்குள் புகுந்தான்.
சற்று நேரத்தில்…..
வெங்கு, கரடி பொம்மையின் காதை
திருகினான்!
பாஸ்…. பாஸ்…வெங்கு ஹியர்!
எஸ்…வெங்கு.. போலீசாரின் மேலிட கடிதம் ஒன்று கிடைத்து
இருக்கிறது…
நமது வேலையை போலீஸ் இலாகா குறைத்து விட்டது!
சி. ஐ. டி. ரகு நமது பொம்மை கடையை
சந்தேகப்பட்டு சுற்றுகிறான்…
ரகுவிற்கு கெடு 15 நாள்தான்….
நாளை இரவுக்குள்
சி. ஐ. டி. யை பாதாள
சிறையில் அடைத்து விடு
வெங்கு!…
அவனை தேடுவதில் போலிசாரின் கவனம்
திரும்பட்டும்!…
காரியத்தை கச்சிதமாக
முடித்து விட்டு வா!
ஓகே, பாஸ்!
777சிகரெட் இருக்கா?
இல்லை சார்!
அப்போது….
எக்ஸ்யூஸ்மீ சார்!
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்…
ம்…மான் வலைக்கு வந்து
விட்டது!
அவனே பற்ற வைத்தான்!
சில நிமிடங்கள் சென்றன!தலை சுற்றுகிறதே!
வெங்கு, ரகுவை தாங்கிப்
பிடித்துக் கொண்டான்.
அவர்களை நோக்கி ஒரு
கார் மெதுவாக வந்தது.
தொடரும்.