63-தையல் சொற்கேளேல்
சதாசிவத்திற்கும், சுகுணாவிற்கும் ஒரே மகன்.
அவன் நன்றாகப் படித்து
அரசாங்க வேலையில் பணிபுரிந்தான்.
அவனுக்குத் திருமணம்
செய்ய பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.
சுகுணா எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் சாதகம் சரியில்லை, குடும்பம்
சரியில்லை, வசதியில்லை இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி
திருமணத்தை தட்டி விட்டுக் கொண்டே சென்றாள்.
பையனுக்கு வயது முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது.
சதாசிவம் பார்த்தார். இனி இவள் சொல் கேட்டாள் சரியாக வராது.
மகனுக்குப் பிடிக்கிறதா? எனக் கேட்டால் போதும், என்ற முடிவுக்கு வந்து பெண் பார்த்ததில் சுகந்தி
படிப்புடன் நல்ல குடும்பமாக அமைந்தது.
தன் மகன் சம்மதத்துடன்
நல்ல முறையில் திருமணம் நடந்தது.
யோசிக்கத் தெரியாமல்
காலம் கடத்தி மன அழுத்தத்திற்கு உள்ளாவதை விட…
நல்ல முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் முடிவு எடுக்கும் போது எதிர் மறையான எண்ணம் உள்ள பெண்
பேச்சு கேட்கக்கூடாது. என்று அன்றே ஔவையார் “தையல் சொற்கேளேல்”என்று கூறி இருக்கிறார்.
சதாசிவம் எடுத்த முடிவாள் அந்தக் குடும்பம்
இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.