வெங்கு! திட்டம் தடங்கல் இன்றி நிறைவேறி விட்டால், பல கோடி ரூபாய்….

நீங்கள் கவலைப் படாதீர்கள், பாஸ்!

ஒரே நாள் தான்! எல்லோரும்  வெளி நாடு சென்று விடலாம்!

வெங்கு! பொம்மைக் குழம்புகளை, வார்ப்புகளுக்கு நிறைய வைத்துக் கொள்!

ஒகே, பாஸ்!

அமாவாசை இரவு, நம்மை
குபேரர்கள் ஆக்கும் இரவு!

ம்.,. இவனை அதுவரை
சிறையில் அடைத்து வை!

சரி பாஸ்!

நம் திட்டம் நிறை வேறியதும், இவனைக் கொன்று, போலீஸ் துறையின் கவனத்தை திசை திருப்பி விடலாம்!

போலீசார்  மண்டையைப்
பிய்த்துக் கொள்வார்கள்!

ஆகா!… அபாரம்! அற்புதம்!

ரகு ‘திடீரென’ சிரித்தார்!
ஹா.. ஹா…ஹா…

மறைந்து இருக்கும் பேடியே! உன் கற்பனை
மிகவும் அபாரம்!

டேய்!… நாவை அடக்கு!

வெங்கு சீறினான்!

பூனை, கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று
நினைத்ததாம்!

போலீஸ் துறையின் ஆற்றலை பொறுத்து
இருந்து பார்! சுண்டேலியைப் போல் நசுக்கி விடுவார்கள் உங்களை!

என்ன திறமை! காணாமல் போன உன்னை தேடுகின்ற லட்சணத்தை பார்த்தாய்
அல்லவா…

அடே! மறைந்து இருக்கும்
மாமிச பிண்டமே! தைரியம் இருந்தால் எதிரே வா!

வெங்கு! அதிகப்பிரசங்கித்
தனமாகப் பேசும் இந்த நாயை கொண்டு போய் சிறையில் அடை!

போடா அந்த அறைக்குள்!

திமிர் பிடித்த உன்னை…

முட்டாள்!உன்னை வைத்து தான், உன் இலாக்காவுக்கே தண்ணி
காட்ட வேண்டும்!..

முண்டமே! உயிரை பயணம் வைத்து தான் இங்கே வந்தேன்! உன்னைப் போல் மறைந்து வீரம் பேசும் பேடி அல்ல நாங்கள்!

ம்…. அடக்கு!…

சர்…கர்…புர்…. சி. ஐ. டி.
நின்ற இடம் வட்டமாக பிளந்தது!

சி. ஐ. டி. ரகு சிறை அறையில் ‘தொப்’ என விழுந்தார்!

ஹா…ஹா…ஹா.. ஹா!..

நடுஇரவு! கமிஷனர் வீட்டில் இருந்த ரகசிய போன் அலறியது!

ரிங்…ங்…ங்.. ங்…

எஸ்…

எல்லாப்  பேச்சையும் கேட்டோம்! டேப் செய்யப்
பட்டுள்ளது!

எல்லா நடவடிக்கையும்
தயார் நிலையில் உள்ளதாக ரகுவிடம் தெரிவியுங்கள்!

அன்று அமாவாசை!
கமிஷனர் உத்தரவுப்
படி போலீஸ் படை கிளம்பியது!

ஒரு பிரிவு நகரில் உள்ள
பெரிய கடையை நோக்கி
சென்றது!

நகர எல்லையில் உள்ள
தொழிற்சாலைக்கு மற்றெரு பிரிவு சென்றது!

                            தொடரும்.

Share.

Leave A Reply