ஹைக்கூ கவிதைகள்

41- பனிக்காலம்
      குளிரில் நடுங்குகிறது
      ‘உய்’என்று மரம்.

42- தலை வணங்கி
      வரவேற்கிறது மரம்
      பணியை.

43- சலசலப்பு சத்தத்துடன்        
      சங்கீதம் பாடுகிறது
      நீர்  வீழ்ச்சி.

44- மரச் செருப்பு
     அணிந்த மரம்  
     இயற்கை உரம்.

45-  சின்ன அசைவில்
       சிருங்கார நடனம்
       மரக்கிளைகள்.

46- பச்சைக் கம்பளத்தில்
      வண்ணப் புள்ளிகள்
      இலையுதிர் காலம்.

47- இரவு பகலாய்
      நகர பாதுகாவலன்
      மரங்கள்.

48- மரத் தளம்
      ராக்கெட்
      பறக்கும்பூ .

49- வண்ண வண்ண
     அணிவகுப்பு
      மாலை வெயில்.

50- நீர் ஓடை
      பனியாய்
      சறுக்கி விளையாட.

கவிஞர் ச. மல்லிகா

Share.

Leave A Reply