அப்படியா? பொம்மை பார்சல் தானா?

இந்த பார்சல் போய்
கிடைத்திருக்குமா?
ஓகே!நன்றி சார்!

சரிதான்! எதிரி எதிரில் தான் இருக்கிறான். ஆதாரம்….வலையை விரிக்க வேண்டியதுதான்.

கமிஷனர் சிந்தனையுடன்
அமர்ந்து இருந்தார்!

அப்பொழுது…ரகசிய ‘பைல்’ வந்தது!

கமிஷனர் திகைப்பும்
ஆச்சரியமும் பொங்க
பைலைத் திறந்தார்!

நம் நாட்டின் புராதன
சிலைகள் மிக வேகமாகவும், அதிகமாகவும் வெளி நாடுகளுக்கு கடத்தப் படுகிறது…

இந்நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் பழங்கால
கலைச் செல்வம் அனைத்தையும் இழந்து
விடுவோம்….

எனவே, போலீஸ் துறையினர் விரைந்து செயலாற்ற வேண்டும்!

அரசாங்கமே கவலை அடையும் நிலை வந்து
விட்டதே!…

அனைவரையும் உடனடியாக முடுக்கி விட வேண்டும்.

அந்த நேரத்தில்…

எஸ்…கம் இன்!

சி. ஐ. டி. ரகு உள்ளே வந்தார்!

சிறிது நேரம் சென்று,
சி. ஐ. டி. ரகு வெளியில்
வந்தார்!

அவரை ஏற்றிக் கொண்டு
ஜீப் கிளம்பியது!

கமிஷனர் உத்தரவு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை!

சந்தர்ப்பத்தை பயன் படுத்தினால் மேலே வந்து விடலாம்!

மறு நாள்…தலைமை போலீஸ் நிலையத்தில் இருந்து சி. ஐ. டி, ரகுவிற்கு ஒரு கடிதம் வந்திருந்தது!

அதில்…
மிஸ்டர் ரகு, தகுந்த ஆதாரம் இன்றி விமானத்தை நிறுத்தி சோதனை செய்தது, பிரபல வியாபாரியின்
ஏற்றுமதி பொம்மைகளை
உடைத்து நாசப் படுத்தியது, இந்த குற்றங்களுக்கு…

…. 15 தினங்களில் விளக்கம் தரவேண்டும்.
தவறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும்.

என்  மீதா நடவடிக்கை?

ரகு கவலையுன் கிளம்பினார்!

ரகு கிளம்பியதும்,
ஏட்டு போனை எடுத்து நம்பரை சுழற்றினார்.

ஆமா…15 நாளிலே ஊரில் இருந்து வந்திடுவாங்க!
அம்மாவை ஜாக்கிரதையாக அனுப்பிவை….

ஆமா…ஆமா…

                            தொடரும்.

Share.

Leave A Reply