Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பல்லவி கற்பக விநாயகா கனிவுடன் பார்ப்பவனே காலம் யாவும் துணையாய் நிற்பவனே நற்பலன் கொடுக்கும் நாயகனே கணேசா நல்லருள் புரிவாய் கற்பக விநாயகா சரணம்-1வேண்டும் வரம் தருபவனே வினைகள் போக்கும் கற்பகத் தருவே ஆண்டாண்டு காலமாய் அடியவரை காப்பவனே ஆனை முகத்தோனே வலம்புரி இடத்தோனே தண்டு தாங்கும் மலர் போல பக்தரை தாங்கும் கற்பக விநாயகா தொண்டு செய்கிறோம் துணையாய் நிற்பாய் தூயவனே உன் அருளைத் தருவாய் (கற்) சரணம்- 2 தங்க கவசத்தில் தகதகக்கும் கணேசா கண்குளிர பக்தருக்கு காட்சிதரும் கணேசா ஓங்கி ஒலிக்கும் உன்புகழ் கணேசா நம்பியவரை காக்கும் தும்பிக்கை கணேசா எங்கும் எதிலும் இருப்பவனே கணேசா எங்களைக் காப்பாய் கற்பக விநாயகா பாங்குடன் வந்து பாதபூஜை செய்கிறோம். பக்கத்தில் இருந்து எப்போதும் காப்பாய். (கற்)

Read More

ஆத்திசூடி கதைகள் 47. சீர்மை மறவேல் காவியா வீட்டில் சும்மாவே இருக்க மாட்டாள். நோட்டில் வெள்ளை தாளில் தனக்குப் பிடித்த படத்தை வரைந்து வண்ணம் கொடுப்பது மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பள்ளியில் ஓவியப் போட்டி வைத்திருத்தார்கள். ஏதாவது, நீங்களாக யோசித்து வரையுங்கள் என ஆசிரியர் சொன்னார். சில மாணவ, மாணவிகள் என்ன வரைவது என்று தெரியாமல் இருந்தனர். ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்ததை வரைய ஆரம்பித்தார்கள். காவியா! உலக உருண்டை படம் வரைந்து. மரம் வளர்ப்பு மக்கள் நலனுக்கு அவசியம். மழை உண்டாகும், நீர்நிலை சுத்தக் காற்று கிடைக்கும். மாசு இல்லா உலகத்திற்கு மரம் வளர்ப்பு அவசியம் என்பது பற்றி கருத்துடன் படம் வரைந்து. வண்ணம் தீட்டி ஆசிரியரிடம் கொடுத்தாள். எல்லா படங்களையும் பார்த்த ஆசிரியர் காவியா வரைந்த படத்திற்கு முதல் பரிசு கொடுத்தவர்… படிப்புடன் நமக்கு தெரிந்த, பிடித்த தனிக்கலையை வளர்த்துக் கொண்டே வரவேண்டும். அப்படி வளர்த்துக் கொள்ளும்…

Read More

16 சதா நிறுத்த மூர்த்தி “தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தில் ஊற்ற திரோதமுத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.”“மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கியருள்தானெடுத்து-நேயத்தால் ஆனந்த வாரதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பாதம் தான்.” சிவபெருமான் உயிர்களுக்கு சம்சார கடலில் இருந்து விடுதலை வாங்கித் தர எண்ணிப் பஞ்சாக்ரமே திருமேனியாகக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை எப்போதும் இயற்றி அருளுகிறார். சிவபெருமான் மூன்று கைகளாலும், இரண்டு திருவடிகளாலும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களும் செய்கின்றனர். எவ்வாறு எனில் தமருகம் தாங்கிய கைகளினால் படைத்தலும், அமைந்த கையால் திதியும், மழு தாங்கிய கையினால் அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருவடிகளால் மறைத்தல் செயலையும், அளவரத நடனம் பயிலும் அடித் தாமரையினால் அனுக்கிரகமும் புரிகின்றார். மேலும், உயிர்கள் அனாதியான பந்தத்தினால் கட்டப்பட்டு உள்ளதைப்…

Read More

15-சந்யாநிருத்த மூர்த்தி ஆகமத்திரட்டு“பொங்குங் காதரன் காளம் அயின் றேயொன்றும் புகலாமல் இருந்தனனோர் கணப்பொழுது புலவோர்அங்கவனை இடைவிடாது அருச்சனைமுன்புரிந்தார் அத்திதி ஏகாதசியாமடுத்ததிதி யதனிற்புங்கவர் பாரணம் புரிந்தேபூர்த்தியுற்றார் தன்மேற் பொருந்துதிதி தனில்இமவான் பொற்கொடியை வைத்தேசங்கரன் சூலஞ்சுழற்றி நடித்தனனோர் யாமஞ் சதுர்மறைநூ லதுபிரதோ டம்மேனவேசாற்றும்”.தேவர்கள் சிவனுடைய உதவியின்றித் திருப்பாற்கடலைக் கடைந்தனர்.அதில் நாட்டி வைத்திருந்த மந்தரமலைஆகிய மத்திற்குப் பூட்டப்பட்ட கயிறாக வாசுகி என்னும் பாம்பு இருந்தது. அது தன் தலையையும் வாலையும்பிடித்து ஈர்க்கும் தேவர் மற்றும் அசுரர் வலிக்குத்தாங்க முடியாமல் வாய்வழியாக நஞ்சைகக்கியது.அவ்விசம் யாவரையும்எதிர்த்தது. திருமால் அந்த விசத்தை எதிர்த்து உடல் கருகினார்.தேவர் குழு கைலாயமலையை அடைந்து சிவபிரானுக்குவிண்ணப்பம் செய்தனர்.அருட்கடல் ஆகிய சிவபெருமான் நஞ்சை உண்டு அமுதத்தை கிடைக்கச் செய்தார்.சிவபெருமான் தேவர்களின் துயரத்தினைத் தொலையும்படி நஞ்சினை அருந்திய காலத்தில்…உமாதேவி சிவனின் தொண்டையைப் பிடித்துக்கொண்டார். விசம் உடலுக்குள் போகமல் இருக்க இரவு முழுவதும் விழித்திருந்துஅர்ச்சனை செய்து வழிபட்டார்கள். அந்த நாளே ஏகாதசி என்பர்.மறுநாளாகிய துவாதேசியில் பண்ணவர் பாராயணம்…

Read More

14 -புஜங்கத்ராச மூர்த்தி கந்தபுராணம் “ஏந்திய பின்னர் வேள்வி எரியதற் கிடையே யெண்ணில் பாந்தளங் கொழுந்து தீயோர் பண்ணியினாற் சீற்றம் கொண்டு போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பால் சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதிற் புனைந்தான் எங்கோன்.” தாறு என்னும் வனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர்களது மனைவியர் கற்பை சிறந்தது என்றும் கருதினர். கடவுளார் பெருமானாகிய கண்ணுதலைப் பரம்பொருள் என்பதை அறியாமல் மமதை கொண்டு வாழ்ந்திருந்தனர். அக்காலத்தில் சிவபெருமான் திகம்பரமாய்ப் பிட்சாடணத் திருக்கோலம் கொண்டும், திருமால் அழகான மோகினி வடிவேற்றும் அவ்விடத்திற்குச் சென்று அந்த முனி பத்தினிகளின் அகந்தையையும், முனிவர்களின் அகந்தையையும் அழித்தனர். உடனே, கொடிய விச மரங்களைக் குச்சியாக்கி, வேம்பு போன்றவற்றினை நெய்யினால் முக்கி அபசார வேள்வி செய்தனர் தாருவன முனிவர்கள். அதிலிருந்து வெளிவந்த பல பொருட்களையும் பரமபதியின் பேரில் பிரயோகிக்க, சிவபெருமான் அவற்றை எல்லாம் உடை, பாதச் சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை…

Read More

முழுமையான சரணாகதி கொள் அப்போது நீ எல்லாம் பெறுவாய் துன்பம், பயம் தவறு அனைத்தும் என்னிடம் விடு நான் உன்னை கையில் பிடித்த நடத்துவேன் தடைகள் உடையும் ஓர் உண்மை மட்டும் போதும் “நீ எனது குழந்தை”. எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

நம்பிக்கை இல்லாமல் ஒரு அடி கூட நடந்திருக்க முடியாது அதனை நான் உணர்வாக மாற்றுகிறேன் நீ கேட்கும் எல்லா ஆசைகளும் தீரும் சரணாகதியுடன் ஏனெனில் சரணாகதி என்பதே என் அருள் விளக்கம். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

நீ என்னிடம் வந்தாய் காலம் எதுவாக இருந்தாலும் முந்தைய பாவங்களை பேசமாட்டேன் புதிதாக தொடங்குவேன் மறந்தாலும் பரவாயில்லை ஆனால் விட்டுவிடாதே ஒரு முறை சொல்லு “ஓம் சரவணபவ” போதும். எழுத்துஇசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

41- விண்ணும், மண்ணும் பார்த்து காலை பிராத்தனை மைனாக்களின் சபையில் 42- வானப்பட்டில் தவழ்ந்தது மின்னும் வெள்ளிகளுடன் நிலா.43- ஓவியம் பேசியது சிற்பம் பேசியது மௌனத்தில்.44- அதிகம் கேள் குறைவாய் பேசு வெற்றி வழி.45- சோதனை வாழ்க்கையில் அடி அல்ல….! உயர்த்தும் படி. 46- செல்ல அமுது பாப்பா பாலும் சோறும் தின்னும் பாசமுள்ள கிளி.47- கண்ணியம் காலத்தின் சின்னம் கடமை அதன் மூச்சு வியர்வை அதன் விளைச்சல்.48- தோல்வியில் முயற்சி அறுபட அறுபட பின்னியது சிலந்தி.49- சோதனை என்பது சோர்வடைய அல்ல உறுதியாக்க.50- மண்ணாய் மிதித்தாலும் பொன்னாய் மதித்தாலும் சமமாய் ஏற்பவன் பெண்.

Read More

புகழ் தேடாதே அது நிழலாகும் உண்மையை தேடு அது நிலையாகும் உன் மனசாட்சி பேசும் போது கவனிக்கத் துடி அதிலே முருகன் இளம் குரலில் பேசுவான். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More