16 சதா நிறுத்த மூர்த்தி

“தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தில் ஊற்ற திரோதமுத்தி நான்ற மலர்ப்பதத்தே
நாடு.”

“மாயை தனைஉதறி
வல்வினையைச்
சுட்டுமலம்
சாய அமுக்கியருள்
தானெடுத்து-நேயத்தால் ஆனந்த வாரதியில் ஆன்மாவைத்
தானழுத்தல்
தானெந்தை  யார்பாதம் தான்.”

சிவபெருமான் உயிர்களுக்கு சம்சார கடலில் இருந்து விடுதலை வாங்கித் தர எண்ணிப் பஞ்சாக்ரமே திருமேனியாகக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை எப்போதும் இயற்றி அருளுகிறார்.

சிவபெருமான் மூன்று கைகளாலும், இரண்டு திருவடிகளாலும்  படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களும் செய்கின்றனர். 

எவ்வாறு எனில் தமருகம் தாங்கிய கைகளினால் படைத்தலும், அமைந்த கையால் திதியும், மழு தாங்கிய கையினால் அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருவடிகளால் மறைத்தல் செயலையும், அளவரத நடனம் பயிலும் அடித் தாமரையினால் அனுக்கிரகமும் புரிகின்றார்.

மேலும், உயிர்கள் அனாதியான பந்தத்தினால் கட்டப்பட்டு உள்ளதைப் போக்குவதற்காகவே, அருள் வடிவாகிய அம்மையார் பக்தர்கள் மீது கொண்ட அனுக்கிரகம் காரணமாய் பஞ்சாக்கர வடிவம் ஆகிய அந்த ஆனந்தத் திருநடத்தை இடப்பக்கம் நின்று தரிசிப்பர்.

சிவபிரான் திருத்தக் கோலம் கொண்டு திருவடியில் நகரமும், திருவயிற்றில் மகரமும், திருத்தோளில் சிகரமும், திருமுகத்தில் வாகாரமும், திருமுடியில் யகரமும் கொண்டு
ஸ்ரீ பஞ்சாட்சரமே திருவுருவமாகக் கொண்டு  உயிர்களின் மீதுள்ள கருணையார் ஐவகையான நிருத்தியங்களையும் இயற்ற நிற்பர்.

இனி இந்த நடனம் ஊன நடனம், ஞானநடனம், என இரு வகைப்படும், சிவபெருமான்
திருக்கயிலாய மலை, ஸ்ரீ மேருமலை, வடாரண்யம், திருத்தில்லை, திருவாலவாய், திருநெல்வேலி திருக்குற்றாலம், திருத்தெளிச்சேரி முதலிய பல இடங்களிலும் பல காரணங்களால் பலமுறை நடனம் புரிந்துள்ளார்.

இருப்பினும் ஸ்ரீ பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு பஞ்ச கிருத்திய காரணமாக
உமையம்மையார் எப்போதும் தரிசித்து நிற்கும் படியாகவும் திருமால் திருநந்தி தேவர், சிவகணங்கள் முதலானவரது தோற்கருவி மத்தளம், பறை,
தொளைக்கருவி குழல், நரம்புக் கருவி வீணை,
கஞ்சக் கருவி வெண்கலத்தாலான தாளக் கருவிகள், மிடற்றுக் கருவி வாயால்  பாடுதல் போன்றவை முதலியவற்றின் ஓசையோடு திருநடனம் செய்து கொண்டு இருப்பதால் சதாநிருத்த மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.

இவர் சிதம்பரத்தில் அமைந்துள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்போதும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறார்.

அனைத்து உலகங்களிலும் உள்ள நடராஜர் இரவில் இங்கு ஒடுங்குவதாக ஐதீகம். எனவே, நடராஜப் பெருமானை வணங்கி நாமும் அவர் அருள் பெறுவோம்.

Share.

Leave A Reply