பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
              பல்லவி

கற்பக விநாயகா கனிவுடன் பார்ப்பவனே
         காலம் யாவும் துணையாய் நிற்பவனே நற்பலன்  கொடுக்கும் நாயகனே கணேசா
        நல்லருள் புரிவாய் கற்பக விநாயகா

           சரணம்-1

வேண்டும் வரம் தருபவனே
        வினைகள் போக்கும் கற்பகத் தருவே
ஆண்டாண்டு காலமாய் அடியவரை காப்பவனே
      ஆனை முகத்தோனே  வலம்புரி இடத்தோனே தண்டு தாங்கும் மலர் போல
        பக்தரை தாங்கும் கற்பக விநாயகா
தொண்டு செய்கிறோம் துணையாய் நிற்பாய்
        தூயவனே உன் அருளைத் தருவாய் (கற்)


             சரணம்- 2

தங்க கவசத்தில் தகதகக்கும் கணேசா
         கண்குளிர பக்தருக்கு காட்சிதரும் கணேசா
ஓங்கி ஒலிக்கும் உன்புகழ் கணேசா
        நம்பியவரை காக்கும் தும்பிக்கை கணேசா எங்கும் எதிலும் இருப்பவனே கணேசா
        எங்களைக் காப்பாய் கற்பக விநாயகா பாங்குடன் வந்து
பாதபூஜை செய்கிறோம். பக்கத்தில் இருந்து எப்போதும் காப்பாய். (கற்)

Share.

Leave A Reply