கல்விக்கு அரசி வெள்ளைத் தாமரையில் அமர்ந்தவளே வீணையை மீட்டும் கலைவாணியே கூத்தனூரில் பிறந்து வளர்ந்தவளே கூரான அறிவை தருபவளே (வெள்ளை) ஊமையைச் பேச வைத்தவளே மூக்கவி ஆக்கி மகிழ்ந்தவளே பாரதிக்கு அரசியே கலைவாணியேபாரின் உயர்த்தி காட்டியவளே (வெள்ளை) கல்விக்கு அரசியே கலைவாணியே கலைகளில் எல்லாம் உன் வடிவம் சக்தி கொடுப்பவள் நீயம்மா சாதிக்க வைப்பதும் அருள் அல்லவா (வெள்ளை)அட்சய பாத்திரம் நீ அம்மா காமதேனும் நீயம்மா கற்பகவிருட்சம் நீ அம்மா கருணை கடலும் நீயம்மா (வெள்ளை )
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
மாயாஜாலம் மாயாஜாலக் காரியம்மா மந்திர சூலியம்மா கண்ணால் பேசும் கற்பகமே நீயம்மா (கண்) (மாய) புன்னகையால் பூக்கும் பூ முகம் கொண்டவளே உன் பார்வை பட்டால் பாவமும் பறந்து ஓடும் (மாய)வேதனை கொடுத்து வேடிக்கை செய்பவளே சகலமும் கொடுத்து சாதிக்க வைப்பவளே (மாய) சக்தி பீடம் வந்து சரண் அடைந்தவர்க்கு கேட்டதை கொடுத்திடும் காமதேனு நீயம்மா (மாய)
பல்லவி அம்மா நாராயணி அம்பிகை நாராயணி நந்தகோபாலன் துணையே நாராயணி (அம்மா) சரணம் அலை கடல் தாலாட்ட எழுந்த நாராயணி அமிர்த கலசமாய் வந்த நாராயணி அகிலம் வணங்கும் லட்சுமி தேவி அண்டம் காக்கும் திருமால் நாராயணி (அம்மா) சரணம் நெஞ்சில் குடிகொண்டு நிம்மதி தருபவள்நித்ய சேவையில் துணையாய் நிற்பவள் கருணைக் கடலே கற்பக விருட்சமேகலங்கும் மக்களை காக்கும் கரமே (அம்மா)
பல்லவி அஷ்ட லட்சுமி வருக ஐஸ்வர்யம் தருக! அஷ்ட லட்சுமியே வருக அம்மாவே வருக! அனுபல்லவி முப்பெரும் தேவி வருக மூகாம்பிகையே வருக (அஷ்ட) சரணம் தாமரை மலரில் வருக தரணி காக்க வருக ஓம் என்ற ஒலியில் வருக உலகை காக்க வருக (அஷ்ட) சரணம் அன்னபூரணி வருக அகிலம் காக்க வருக சமய புரத்தாள் வருக சகலமும் தரவே வருக (அஷ்ட) சரணம் வருக அம்மா வருக வர லட்சுமி வருக நலம் தரவே வருக நல் வரவே வருக (அஷ்ட)
மாணிக்க ஊஞ்சலிலே ஆடிடும் மங்கை மக்களின் எண்ணத்தை அறிந்திடும் மங்கை தங்க ஊஞ்சலில் ஆடிடும் மங்கைதரணிக்கு தந்தருளும் தவத்திரு மங்கை மலர் ஊஞ்சலில் ஆடிடும் மங்கைமனம் மகிழ்ந்து ஆடிடும் மங்கை திருச்சானூர் மண்ணிலே அமர்ந்த மங்கை விஷ்ணுவின் மார்பிலே ஆடிடும் மங்கை அழகாக ஆடுகின்றாள் அலர்மேலு மங்கை.
நவராத்திரி பாடல் சிம்மவாகினி பல்லவி சிம்ம வாகினி சிவலோக தேவி நீ (சிம்ம) சரணம் மங்கலம் அருளும் மங்கல சக்தி நீ! சடைமுடி தரித்தவன் உமையவள் பத்தினி! (சிம்ம) சரணம் துக்க நிவாரணி துலங்கும் சக்தி நீ!துன்பம் போக்கும் சகல சக்தி நீ! (சிம்ம) சரணம் நிம்மதி தருபவள் நித்திய சாந்தி நீ! நெஞ்சில் நிறைந்தவள் நித்திய கல்யாணி நீ! (சிம்ம) ஜெய துர்கா பரமேஸ்வரி! ஜெய வர்த்தினி ஜெய துர்க்கையே! (சிம்ம)
மதுரை வீதியில் மீனாட்சி! மங்கலமாய் அவள் வந்திடுவாள்! தோளில் கிளியுடன் மீனாட்சி!தேரோடும் வீதியில் வந்திடுவாள்! (மதுரை)கருணை மழையே மீனாட்சி! காண்போர்க்கு காட்சி தந்திடுவாய்! சொக்கன் மனைவி மீனாட்சி! சொர்க்க மார்க்கம் காட்டிடுவாள்! (மதுரை)சங்கத் தமிழே மீனாட்சி! சங்கரனுடன் காட்சி தந்திடுவாய்!பிறவி மருந்தே மீனாட்சி! பிறவாமை வரம் தந்திடுவாய்! (மதுரை)பாண்டியன் மகளே மீனாட்சி! பார் புகழச் செய்திடுவாய்! புதுநீரில் ஆடும் மீனாட்சி! புதுமைகள் செய்யப் புறப்படுவாள்! (மதுரை)மூங்கில் உருளையில் மீனாட்சி! ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுவாய்! ஆணவம் அழிக்கும் மீனாட்சி! அடியவர் மனதில் தங்கிடுவாய். (மதுரை)
இச்சா, கிரியா, ஞான சக்தியாய் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி நீயே! மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த மகிஷாசுர மர்த்தினி நீயே அம்மா!அசுர குணத்தை அழித்தவள் தேவி அன்பு மனத்தை கொடுத்தவள் தேவி உலகத்தை காக்கும் லோக நாயகி பெண்ணின் பெருமை புரிய வைத்தாய்! பெண்ணின் பெருமை தெரியா அசுரன் பெண்ணின் கரத்தால் சாக விரும்பினான் பிரம்மனும் வரத்தை கொடுத்து வாழ்த்தவே ஆணவத்தில் உலகை ஆட்டிப் படைத்தான்! துன்பத்தை அழிப்பவள் துர்கா தேவி அசுரனை அழித்தால் முப்பெரும் தேவி நம்பிக்கை உடனே தும்பிக்கை உதவிட துர்க்கை அருளோடு வாழ்க்கை வளமாகும். ஒன்றில் துவங்கி பத்தில் முழுமையாய் விஜய தசமி வெற்றி திருவிழா தீய சக்தியை தீயிட்டுக் கொழுத்த கூட்டுப் பிரார்த்தனை குடும்ப விருத்தி.
பச்சை பசுமை அழகு படர்ந்த கொடி அழகு உச்சியில் மரம் அழகு உதிர்ந்த மலர் அழகு குச்சிக் கோல் அழகு குதித்தாடும் நடை அழகு கச்சிதமான தமிழ் அழகு காக்கும் கரம் அழகு! காலை கதிரவன் அழகு கருத்த விழி அழகுசாலை வேள்வி அழகு சாத்தும் காப்பு அழகு பாலை பண் அழகு பக்தி சொல் அழகு மாலை விளக்கு அழகு முருகன் கைவேல் அழகு குன்றில் குமரன் அழகு குரங்கு சேட்டை அழகு இன்னிசைக்கும் பறவை அழகு இனிய ஊற்று அழகு கன்றுக் குட்டி அழகு கறவை மாடும் அழகு கூன் வளைவு அழகு கூரான வேல் அழகு.