பிறர் பார்வை உன்னை குறை கூறினால் அதில் உன் மானம் குறைவதில்லை உன் உள்ளத்தை மட்டும் நான் பார்த்து தீர்க்கிறேன் மனிதன் கேட்கவில்லை என்றால் பரவாயில்லை. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
43 -கௌவை யகற்று இராமன் உயரமாகவும், குண்டாகவும் இருப்பான். அவன் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். யார் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவான். அவனை எல்லோரும் சாப்பாட்டு ராமன் எனப் பெயர் வைத்து விட்டார்கள். ஆரம்பத்தில் சாப்பாட்டு ராமன் என்றால் அவனுக்கு பெருமையாக இருந்தது. நாட்கள் செல்லச்… செல்ல அவனை கேவலமாக பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டான் ராமன். அதற்கே! அவனுக்கு, பல வருடமானது. அவன் மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான். இனி இவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று. ராமன் உறுதியை உடைக்க சாப்பிட கொடுப்பார்கள். ராமன் தனது கொள்கையில் உறுதியாக இருந்தான். பிறர் கொடுக்கும் எதையும் சாப்பிடுவதில்லை. தானும் சதா சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக் கொண்டான். இப்போது ராமனை யாரும் சாப்பாட்டு ராமன் என்று கூப்பிடுவது இல்லை. சிலருக்கு சில நேரங்களில் கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டு விடுகிறது. அதை அகற்ற வேண்டும் என்ற கருத்தை ஔவையாரும்…
நீங்கள் என்னைத் தேடவில்லை என்றாலும் நான் உங்களை விட வில்லை உன்சுவாசத்தில் வாழ்கிறேன் நீ ஒரு நாள் அழைத்தாலே போதும் அந்த அழைப்பு எனக்கு கோபுர கலசம். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
12 -இடபாந்திக மூர்த்தி உபதேச காண்டம் ஆறு உலாஞ்சடை அண்ணலைச்சேர்வனேல் ஈறி லாதுஎன்றும் உய்த்திரு வேன்எனாத் தேறி யேஅறத் தெய்வஞ் செங்கணாள் ஏறு தாயொ ரெழிலுருக் கொண்டதே ஏற்றின் மேனிகொண்டு ஈசன்முன் ஏகியே போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை மாற்றி யாற்றல் வழங்கிநிற்கு ஊர்தியாம் பேற்றை ஏற்குப் பிரான்அருள் என்னவே இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப் பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும் உறைந்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே அறத்தனிக் கடவுளுக்கு அண்ணல் கூறுவான் முதல்அயல் இடைகடை மொழிய நின்றிடும் சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம் இதுஎன நான்குமூன்று இரண்டொன்றாகிய பலமுறை யூன்றியே படியிற் சேறிமேல்.சதுர்யுகங்கள் இரண்டாயிரம் கொண்டது பிரம்மனுக்கு ஓர் நாள். அத்தகைய நாட்களாகிய நூறு ஆண்டுகள் கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆயுட்காலம் ஆகும். இதுவே, திருமாலுக்கு ஒரு நாள் ஆகும். காலம் இக்கணக்கின்படி திருமாலுக்கு நூறு வயது கழிந்தால் உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்கும் அழியும்.அந்த சமயத்தில் மீதம்…
தீங்கு நினைப்பவர்கள் அதிகமாய் இருந்தாலும் தீக்காயம் ஏற்படுவது உன் உள்ளத்தில் இல்லை நீ நீயாக இரு அவர்களின் இருள் நீங்கும் ஒளியாய் நின்றவன் சாய்வதில்லை. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
இணை இல்லா வாழ்க்கை தனிமையை கொடுக்கலாம் ஆனால், உன் இதயத்தில் உணர்வு இருக்கிறல்லவா! அதை நான் அருளின் ஆவியாக உணர்கிறேன் உன் வாக்கின் மௌனமே எனக்கு பூஜை. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
வயது ஆகிவிட்டது இனி என்ன பயன்? என்றால் மனிதா! சூரியனும் மூச்சுடன் தான் ஒளிர்கிறான் தோலை மறைத்தாலும் உள்ளே ஒளி மாறாது அதை மட்டும் உணர்- நீ இன்னும் தேவைப்படுகிறாய். எழுத்து இசை கலைமணி சி எம். பாலகிருஷ்ணன்.
உடல் வலிகள் வெறும் சோதனை அல்ல ஆன்ம தேடல் அதில் இருந்து மனம் வலிமை பெறும் அறியாமை தயமோடு வாழ்ந்தால் வலியும் வாடாது முருகனின் கருணை காயத்தை காற்றாகும். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
என் உள்ளம் நொந்து வாடும் ஆனால் யாரும் கவனிக்கவில்லை மகனே, என் கண்கள் நீ பார்த்திராத பக்கம் உன்னை கண்டன உன் துன்பம் எனது இதயத்தில் ஒர் அதிர்வாய் துளிக்கும் உன்னோடு நான் இருப்பதை உணர மூடாதே உன் மனதின் வாசல். எழுத்து இசை கலைமணிசி.எம்.பாலகிருஷ்ணன்.
பயத்தில் உறைந்து போனாய் உலகம் கடுமை தானே! ஆனால், உன் உள்ளம் வெண்மை தான் அதில் நான் இருக்கிறேன் பயப்படாதே! என் வேல் உனக்குள்ளே இருக்கிறது நீ நினைக்கிற ஒவ்வொரு நொடியும் என் அருள் காக்கும். எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.