ஆத்திசூடி கதைகள்
47. சீர்மை மறவேல்
காவியா வீட்டில் சும்மாவே இருக்க மாட்டாள்.
நோட்டில் வெள்ளை தாளில் தனக்குப் பிடித்த படத்தை வரைந்து வண்ணம் கொடுப்பது மிகவும் பிடிக்கும்.
ஒரு நாள் பள்ளியில் ஓவியப் போட்டி
வைத்திருத்தார்கள்.
ஏதாவது, நீங்களாக யோசித்து வரையுங்கள் என ஆசிரியர் சொன்னார்.
சில மாணவ, மாணவிகள் என்ன வரைவது என்று தெரியாமல் இருந்தனர்.
ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்ததை வரைய ஆரம்பித்தார்கள்.
காவியா! உலக உருண்டை படம் வரைந்து. மரம் வளர்ப்பு மக்கள் நலனுக்கு அவசியம். மழை உண்டாகும், நீர்நிலை சுத்தக் காற்று கிடைக்கும். மாசு இல்லா உலகத்திற்கு மரம் வளர்ப்பு அவசியம் என்பது பற்றி கருத்துடன் படம் வரைந்து. வண்ணம் தீட்டி ஆசிரியரிடம் கொடுத்தாள்.
எல்லா படங்களையும் பார்த்த ஆசிரியர் காவியா வரைந்த படத்திற்கு முதல் பரிசு கொடுத்தவர்…
படிப்புடன் நமக்கு தெரிந்த, பிடித்த தனிக்கலையை வளர்த்துக் கொண்டே வரவேண்டும். அப்படி வளர்த்துக் கொள்ளும் போது அது உங்களுக்கு புகழைத் தேடித் தரும்.
புகழைத் தரும் எந்த கலையையும், காரியத்தையும் செய்வதற்கு மறக்கக் கூடாது என்று பாராட்டினார்.
ஆசிரியர் சொன்ன கருத்தை புலவர் ஔவையாரும் “சீர்மை மறவேன்” என்று கூறியிருக்கிறார்கள்.
