Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

ஆத்திசூடி கதைகள்51-சேரிட மறிந்து சேர்பத்தாம் வகுப்பு அறையில் சலசலப்பாக இருந்தது. அதற்கு காரணம் புதிதாக வந்த மாணவன்.‘A’பிரிவில் இருந்து வந்த மணிதான் காரணம்.சுகுமார் இருந்த பெஞ்சில்அமர வைத்தார் ஆசிரியர்.சுகுமார் நன்றாகப் படிக்கும் மாணவன்.மணி தன் பக்கத்தில் அமர்ந்து இருந்ததால். அவனுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.மணி சுமாராகப் படிக்கும்மாணவன். பேசுவதிலும், வீணாக அரட்டை அடிப்பதிலும் அவனுக்குப் பிடிக்கும்.தன் பக்கத்தில் இருந்த சுகுமாருடன் பேசி…பேசி,நேரத்தை வீண்செய்தான்.அந்த மாத மாதாந்திர தேர்வு வந்தது. அதில் சுகுமார் மதிப்பெண் குறைந்து இருந்தது.இது எப்படி நடந்தது என யோசித்தான் சுகுமார்.தன் அருகில் அமர்ந்தமணி தன்னை அவன் வசப்படுத்தி பேசிக் கொண்டு இருந்தது தான் காரணம், எனத் தெரிந்து கொண்ட சுகுமார்.ஆசிரியரிடம் சொல்லி வேறு பெஞ்சில் மாறி உட்கார்ந்து கொண்டான் சுகுமார்.இதைத்தான் ஔவையாரும் “சேரிட மறிந்து சேர்” என்று அன்றே சொல்லிச் சென்று உள்ளார்கள்.

Read More

19- கங்கா விசர்சனமூர்த்தி        கந்தபுராணம் “அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை தன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தான் மீளப் பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை முடிமேல்தங்கி இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான்.” அயோத்தி நகரை ஆண்டு வந்த சகரன் என்னும் அரசன் செய்த அசுவமேத யாகத்தின் குதிரையைக் கண்ட இந்திரன் மனம் பொறுக்க முடியாமல் தன் வாழ்வுக்குத் துன்பம் வந்ததே என்று மனம் நொந்து போனான். வஞ்சனையால் பாதாளத்தில் கடுமையான தவம் புரியும் கபில முனிவர் பக்கத்தில் அக்குதிரை கட்டிப் போட்டான். அயோத்தி மன்னனின் அறுபதினாயிரம் மக்களும் அம்மன்னனின்   கட்டளைப்படி உலகம் முழுவதும் அக்குதிரியை தேடினர். எங்கும் அது கிடைக்காததால் பாரைத் தோண்டிப் பாதாளத்தை அடைந்தனர். கபிலர் பக்கத்தில் கட்டியிருந்த குதிரையைக்ண கண்டனர். உடனே, அவர்கள் இக்கள்வனே நமது குதிரையைக் கவர்ந்து வந்துள்ளான். நம் மன்னனின் யாகத்தைப் போக்கக் கருதியவன் இவனே என்று கோபம்…

Read More

பல்லவிதிருக்கல்யாணம் காணவே வாருங்கள்முருகனின் திருக்கல்யாணம் காணவே வாருங்கள்தெய்வானை, முருகன் திருக்கல்யாணம் காணவே வாருங்கள்கல்யாணம் காணவே வாருங்கள். சரணம்அசுரனை வென்று தேவரை காத்துவெற்றி வாகை சூடிய முருகனின்கல்யாணம் காணவே வாருங்கள்திருக்கல்யாணம் காணவே வாருங்கள் சரணம்திருமால், பிரம்மன் முருகனை அழைத்து வரதிருமகள், சரஸ்வதி மணமகளுடன் இணைந்து வரவாத்திய மேள மங்கல இசையுடன்சிவன், பார்வதி, தேவர்கள் சூழகல்யாணம் காணவே வாருங்கள்திருக்கல்யாணம் காணவே வாருங்கள் சரணம்மாப்பிளை முருகன் மணமேடையில் அமரமணமகள் தெய்வானைஅருகில் அமரஅண்ணன் கணபதி வீரபாகு சூழகல்யாணம் காணவே வாருங்கள்முருகனின் திருக்கல்யாணம் காணவே வாருங்கள் சரணம்மாப்பிள்ளை முருகன் மாங்கல்யம் அணிவிக்கமாலை மாற்றி அம்மி மிதித்து அருந்ததி பார்க்கதேங்காய் உருட்டி, பூப்பந்து விளையாடும்கல்யாணம் காணவே வாருங்கள்முருகனின் கல்யாணம் காணவே வாருங்கள் சரணம்சீர் வரிசைகள் பார்த்துபந்தியில் அமர்ந்து பட்சணம் உண்டுஇந்திரன், இந்திராணிகொடுக்கும் தாம்பூலம் தரித்து மொய் எழுதும்கல்யாணம் காணவே வாருங்கள்முருகனின் திருக்கல்யாணம் காணவே வாருங்கள் சரணம்ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேவந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தமேமுருகன் மணமகன் ஆனாரேதெய்வானை மணமகள் ஆனாளேஆனந்தம் ஆனந்தம்…

Read More

ஆத்திசூடி கதைகள் 50- செய்வன திருந்தச்செய் காலையில் எழுந்த ஜெயா வாசல் கூட்டித் தெளித்து கோலம் போடுவதை தினமும் பார்த்துக் கொண்டு இருந்த அவள் மகள் சங்கரி… அம்மா நான் கோலம் போடுகிறேன் என்றாள். இங்கே வா சங்கரி என்று அழைத்த ஜெயா! கோலப் பொடியை எடுத்து எப்படி போடுவது எனச் சொல்லிக் கொடுத்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள். கோலப் பொடியை எடுக்க சங்கரி புள்ளி வைத்து கோலம் போட்டாள். கோலம் சரியாகப் போட்டு விட்டாள். ஆனால், கோலப் பொடியை சிதற விட்டு அங்கும், இங்கும் சிதறி இருந்ததால் கோலத்தின் நேர்த்தி இல்லாமல் இருந்தது. அம்மாவிடம் சென்ற சங்கரி, அம்மா! கோலம் போட்டு விட்டேன் என்றாள். மகள் போட்ட கோலத்தை வந்து பார்த்த ஜெயா! கோலத்தின் அழகை அவள் சிந்திய கோலப் பொடி கெடுத்து விட்டதை கண்ட ஜெயா… சங்கரி கோலம் போட்டு விட்டாய். ஆனால், அதன் நேர்த்தி, அழகு,…

Read More

ஒளியின் திருநாள்தீபாவளி வந்தாச்சுமனதின் இருளோமத்தாப்பு ஒளியால் போயாச்சு…அன்பினால் தீபம்இதயத்தில் ஏற்றிட இனிப்பு சுவையாய்வாழ்க்கை தித்திக்க…அன்பும், சிரிப்பும்நிறைந்து மலரட்டும்நட்பும், உறவும்என்றும் நிலைக்கட்டும்ஒவ்வொரு இதயத்திலும்மகிழ்ச்சி ஒளிரட்டும்வெற்றி தீபம்உங்கள் வாழ்வில் எரியட்டும்…நலமும், செழிப்பும்என்றும் நிலைக்கட்டும்இனிய நினைவுகள்நிரம்பிய திருநாள் இதுவாக மனமார்ந்ததீபாவளி நல்வாழ்த்துக்கள்.            அன்புடன்,இசைகலைமணிச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

49- சூது விரும்பேல் சுந்தர் அரசுப் பணியில் வேலை செய்து கொண்டு இருந்தார். மனைவி சுந்தரி, மகன் சுதாகர் என நல்ல குடும்பம். தென்றலாய், சந்தோசமாகப் போய்க் கொண்டு இருந்த வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. சுந்தர் வீட்டிற்கு தாமதமாக வர ஆரம்பித்தான். சம்பளப் பணம் குறைவாக கொடுத்து விட்டுச் செலவை சமாளிக்கச் சொன்னான். இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் தெரியாமல் தடுமாறினாள் சுந்தரி. பின் கடன் வாங்க தொடங்கினான். கடன் வட்டி குட்டி போட்டு கடன் தொகை அதிகமானது. கடனை அடைக்க மற்றவரிடம் கடன் வாங்கி பின் அதுவும் கட்ட முடியாமல் தடுமாறினான். நல்லா இருந்த குடும்பம் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் அவன் சூதாடியதுதான் என்று தெரிந்த சுந்தரி மகனை அழைத்துக் கொண்டு அவள் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டாள். செய்வது அறியாது நின்றான் சுந்தர். தர்மர் சூதாடி கெட்ட மகாபாரதம் படித்தும், தெரிந்தும் கூட சூது…

Read More

18- கங்காதர மூர்த்தி திருக்கயிலாய மலையின் அருகில் உள்ள ஒரு சிங்கார வனத்தில் சிவபெருமான் உலாவிக் கொண்டு இருக்கையில். பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானை பின் வந்து தமது திருக்கரங்கள் கொண்டு சிவபெருமானது திருவிழிகளை மூடினார். அதனால், அளவில்லாத உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் துன்புறும் வண்ணம் இருள் நிறைந்தது. சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றின் ஒளியும், தேவர்களின் ஒளியும் மற்றும் உலகில் உள்ள அனைத்துப் பிரகாசமும் குறைந்து பேரிருள் சூழ்ந்தது. சிவபெருமானின் திருவிழி ஒளியால் எல்லா வெளிச்சமும் இயங்குவதால், பார்வதி தேவி சிவபெருமானது கண்களைத் தன் கைகளால் மூடிய அக்கணப் பொழுதில் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் துன்பம் ஏற்பட்டது. அத்துன்பத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான் தன் நெற்றியின் நடுவில் இருக்கும் நீளமான நெற்றிக்கண்ணை ஒரு நொடிப் பொழுது திறந்தார்.அவ் ஒளியைக் கொண்டு உலகின் துன்பத்தைப் போக்கி, எங்கும் நிறைந்து இருந்த பேர் இருளைப் போக்கினார். அதனால் சந்திரன், சூரியன்,…

Read More

48- சுளிக்கச் சொல்லேல் சிவாவும், விமலும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள். இருவரும் நல்ல நண்பர்கள். ஒன்றாகவே இருப்பார்கள். ஒரு நாள் விடுமுறை நாளில், வில் விட்டு விளையாடிக் கொண்டு இருக்கும் போது எதிர் பாராத விதமாக சிவாவின் கண்ணில் அம்பு குத்திவிட்டது. கண்ணில் குத்திய அம்பு குச்சியை எடுத்துவிட்டு உடனடி சிகிச்சைக்கு சிவாவின் அம்மாவும், அப்பாவும் சென்று விட்டார்கள். அந்த சமயம் ஏன் இப்படி செய்தாய்! என்று விமலை அவர்கள் அம்மா… அடி அடி…என அடித்து திட்டினார்கள். விமலும் அடியை வாங்கிக் கொண்டே தெரியாமல் பட்டுவிட்டது அம்மா… என்று சொல்லியும் அவனை அடித்த அடியை விட அம்மா திட்டியது விமலுக்கு மனம் வலித்தது. நண்பன் கண்ணை குத்திவிட்டோமே என்ற குற்ற உணர்வு ஒரு பக்கம்… அம்மா அடித்து திட்டியது ஒரு பக்கம், சிவாவின் கண்வலியை விட விமலுக்கு மனம் மிகவும் வலித்தது. விமலை அடித்து, திட்டிய அம்மாவிற்கும், இப்படி…

Read More

அட்டாட்ட விக்கிரக லீலை 17- சண்ட தாண்டவ மூர்த்திதிருவாலங்காட்டு புராணம் “இன்சுவை பொழியும் சாயல் அபிநயம் இலங்கச் செவ்வாய் புன்சிறு முறுவல் பூப்பப் புரணஆ னந்தம் பூரித்து அன்புறும் அவையோர் உள்ளம் அயர்தர இயங்கட் கேற்ப வின்படு நடனம் காளி யோடு அரன் விளைத்த வேலை.மடிதரும் உலகம் என்ன வயங்கருள் நல்கி மெல்ல அடி பெயர்ந்து ஆடல்செய்ய அருகுஉறும் காளி நோக்கி ஓடிவுறு நாணின் மேவி ஒளிமுகம் இறைஞ்சி ஓல்கிவடிவுறு பாவை போலச் செயலற மயங்கி நின்றாள்.” வட ஆரண்யம் என்னும் திருவாலங்காட்டின் மகிமையைச் சுனந்த முனிவர், சிவபெருமான் மூலமாக அறிந்தார். உடனே, சுனந்த முனிவர் சிவபெருமான் அனுக்கிரகித்த வண்ணம் தாண்டவ தரிசனத்தைக் காண விரும்பி வட ஆரண்யத்தை அடைந்து தவம் மேற்கொண்டார். அவ்வாறு இருக்கையில் கண்ணுதல் கைவிரலின் அணியாகிய கார்கோடகன் என்னும் பாம்பு சிவனின் திருவிரலில் விஷத்தை கக்கியது.உடனே, இடபம் “நம்மை மனதில் கருதாது மமதையோடு நீ செய்த தீமைக்காகத்…

Read More

நவராத்திரி பாட்டு சிருங்கேரி சாரதை பல்லவி சத்ய ஜோதி உன் வாசல் வந்தேன் உன் தரிசனம் தாரும் அம்மா (சத்ய) அனுபல்லவி சிருங்கேரி சாரதை ஸ்ரீ ரங்கநாயகி ஜெயதுர்கா பரமேஸ்வரி (சத்ய) சரணம் துங்கா நதியில் பாவ விமோசனம் தரும் சக்தி தலமே கர்ப்ப தவளைக்கு பாறையில் சர்ப்பம் குடை பிடிக்க பிரம்மா, விஷ்ணு, சிவன் காட்சி தந்து ஆட்சி செய்யும் சாரதை (சத்ய) சரணம் காளிகாம்பா! துர்காம்பா! ஸ்ரீ பார்வதி! ஆஞ்சநேயா! சந்திர மௌலி ஈஸ்வரா!காலபைரவா! ஸ்ரீ சாரதை சாரதாம்பா! (சத்ய)

Read More