இச்சா, கிரியா, ஞான சக்தியாய்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி நீயே! மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த மகிஷாசுர மர்த்தினி நீயே
அம்மா!
அசுர குணத்தை அழித்தவள் தேவி
அன்பு மனத்தை கொடுத்தவள் தேவி உலகத்தை காக்கும் லோக நாயகி பெண்ணின் பெருமை புரிய வைத்தாய்!
பெண்ணின் பெருமை தெரியா அசுரன் பெண்ணின் கரத்தால் சாக விரும்பினான் பிரம்மனும் வரத்தை கொடுத்து வாழ்த்தவே ஆணவத்தில் உலகை ஆட்டிப் படைத்தான்!
துன்பத்தை அழிப்பவள் துர்கா தேவி
அசுரனை அழித்தால் முப்பெரும் தேவி நம்பிக்கை உடனே தும்பிக்கை உதவிட துர்க்கை அருளோடு வாழ்க்கை வளமாகும்.
ஒன்றில் துவங்கி பத்தில் முழுமையாய்
விஜய தசமி வெற்றி திருவிழா
தீய சக்தியை தீயிட்டுக் கொழுத்த
கூட்டுப் பிரார்த்தனை குடும்ப விருத்தி.
