பல்லவி

அம்மா நாராயணி அம்பிகை நாராயணி நந்தகோபாலன் துணையே நாராயணி (அம்மா)

            சரணம்

அலை கடல் தாலாட்ட எழுந்த நாராயணி
அமிர்த கலசமாய் வந்த நாராயணி
அகிலம் வணங்கும் லட்சுமி தேவி
அண்டம் காக்கும் திருமால் நாராயணி (அம்மா)

              சரணம்

நெஞ்சில் குடிகொண்டு நிம்மதி தருபவள்
நித்ய சேவையில் துணையாய் நிற்பவள் கருணைக் கடலே கற்பக விருட்சமே
கலங்கும் மக்களை காக்கும் கரமே (அம்மா)

Share.

Leave A Reply