கல்விக்கு அரசி

வெள்ளைத் தாமரையில் அமர்ந்தவளே வீணையை மீட்டும் கலைவாணியே கூத்தனூரில் பிறந்து வளர்ந்தவளே
கூரான அறிவை தருபவளே (வெள்ளை)

ஊமையைச் பேச வைத்தவளே
மூக்கவி ஆக்கி மகிழ்ந்தவளே
பாரதிக்கு அரசியே கலைவாணியே
பாரின் உயர்த்தி காட்டியவளே (வெள்ளை)

கல்விக்கு அரசியே கலைவாணியே கலைகளில் எல்லாம் உன் வடிவம்
சக்தி கொடுப்பவள்
நீயம்மா
சாதிக்க வைப்பதும் அருள் அல்லவா (வெள்ளை)

அட்சய பாத்திரம் நீ அம்மா
காமதேனும் நீயம்மா கற்பகவிருட்சம் நீ அம்மா கருணை கடலும் நீயம்மா (வெள்ளை )

Share.

Leave A Reply