Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

20- கல்யாண சுந்தர மூர்த்தி திருக்கைலாய மலையில் அனைத்து தேவர்களும் இருக்கையில், நவரத்தின மண்டபத்தில் சிவபெருமான் சிறப்புக் கொண்டு எழுந்தருளி இருக்கையில்… தேவியார் சிங்காசனத்தை விட்டு எழுந்து இறைவனை வணங்கி கைகூப்பி நின்றார். தேவர்களை மதிக்காத தக்கன் மகள் என்பதால் தாட்சாயணி என்று பெயர் பெற்றேன். அந்த அவப் பெயரை மாற்றத் தயவு செய்ய வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும் “மாதே! மலையரையன் உன்னை மகளாகப் பெற தவம் செய்கின்றார். அவருக்கு குழந்தையாக நீபிறப்பாயாக, பிறகு உன்னை யாம் வந்து மணம் செய்கின்றோம்.” என்றார். உமையம்மையார் அது போலவே இமாசலத்தில் உள்ள தாமரை தடாகத்தில் மூன்று வயது குழந்தை வடிவம் ஏற்று வாழ்ந்தார். அக்குழந்தையைக் கண்ட மலைமன்னன் மகிழ்ந்தார். குழந்தையைக் கொண்டு போய் தனது மனைவி மேனை கையில் கொடுத்தார். மகிழ்ச்சி அடைந்த மேனை குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாள்.குழந்தைக்கு பாலூட்டி வளர்த்தாள். அம்மையார் ஐந்து வயதினை அடைந்ததும் அருள் மேலீட்டால்…

Read More

52- சையெனத் திரியேல் ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு இரண்டு குணம் உண்டு நல்ல குணம் கெட்ட குணம் என்று இறைவன் படைத்து விட்டான். நல்ல சிந்தனை நேர்மையாக நடப்பவர் ஒழுக்கம் மிக்கவர்களை, ஊருக்கு நல்லது செய்பவர்களைப் பார்த்து கையெடுத்து வணங்கும் மக்கள். தீய செயல் செய்பவர்களைக் கண்டால் விலகிச் சென்று விடுவார்கள். மது குடிப்பவர், புகை பிடிப்பவர், பொய் சொல்பவர், திருடுபவர், பிறருக்கு கெடுதல் செய்பவரைக் கண்டு இவரா என்று விலகிச் சென்று விடுவார்கள். இப்படிப் பட்ட மனிதர்களை மதிக்கவும் மாட்டார்கள். கேசவன் நல்ல வேலை, சம்பளம் என இருந்தும் அவனுடைய தீய குணம் ஒருவரைப் பற்றி ஒருவரிடம் மாற்றி… மாற்றி பேசி சண்டை போட வைத்து விடுவான். உயர் அதிகாரியிடம் திரித்து பேசி மாட்டி விட்டு விடுவான். கேசவன் குணம் தெரிந்த எல்லோரும் அவனைக் கண்டாலே பயத்தில் இந்தா வந்து விடுகிறேன் என ஓடி விடுவார்கள். இதைத்தான் புலவர்…

Read More

20- திரிபுராந்தக மூர்த்தி தாரகாசுரன் பெற்ற மகன்கள் மூவராவர். அவர்கள் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூவருமாவர்.அவர்கள் பிரம்மனை நோக்கி நெடுங்காலம் தவம் செய்து வந்தனர். அப்போது ஒரு நாள் திடீரென்று பிரம்மன் அவர்கள் முன் தோன்றினார். அவரைக் கண்ட மூவரும் அவரை பல வகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு என்றும் அழியாத வரம் அருள வேண்டும்” என்று கேட்டனர். உடனே, பிரம்மன், “மைந்தரே! உலகில் இறக்காதிருப்போர் எவரும் இல்லை.கற்பகாலம் சென்றபின் யானும், இந்திரனும், தேவர்களும் இறப்போம். சிவபெருமான் ஒருவரை இறக்காமல் இருப்பவர் ஆதலால் அந்த வரத்தை தவிர, மோட்சமாவது வேண்டுங்கள்.” என்று பிரம்மன் கூறினார். உடனே அம்மூவரும் பொன், வெள்ளி, இரும்பினால் அமைந்த சுவர்கள் பொருந்திய முப்புரமும் பூமி, அந்தரம், சொர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் அவை அமைய வேண்டும் என்றனர். மேலும், அவை ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை விரும்பிய இடத்திற்கு மாற வேண்டும். அந்தப் புரம் மூன்றும் ஒன்றுபட்ட…

Read More