நவராத்திரி பாடல்
     சிம்மவாகினி
 
             பல்லவி

சிம்ம வாகினி
சிவலோக தேவி நீ (சிம்ம)

             சரணம்

மங்கலம் அருளும் மங்கல  சக்தி நீ!
சடைமுடி தரித்தவன் உமையவள் பத்தினி! (சிம்ம)

            சரணம்

துக்க நிவாரணி துலங்கும் சக்தி நீ!
துன்பம் போக்கும்
சகல சக்தி நீ! (சிம்ம)

             சரணம்

நிம்மதி தருபவள்
நித்திய சாந்தி நீ! நெஞ்சில் நிறைந்தவள் நித்திய கல்யாணி நீ! (சிம்ம)

ஜெய துர்கா பரமேஸ்வரி! ஜெய வர்த்தினி
ஜெய துர்க்கையே! (சிம்ம)

Share.

Leave A Reply