மாயாஜாலம்

மாயாஜாலக் காரியம்மா மந்திர சூலியம்மா கண்ணால் பேசும் கற்பகமே நீயம்மா (கண்) (மாய)

புன்னகையால் பூக்கும்
பூ முகம் கொண்டவளே உன் பார்வை பட்டால் பாவமும் பறந்து ஓடும் (மாய)

வேதனை கொடுத்து வேடிக்கை செய்பவளே சகலமும் கொடுத்து சாதிக்க வைப்பவளே (மாய)

சக்தி பீடம் வந்து
சரண் அடைந்தவர்க்கு கேட்டதை கொடுத்திடும் காமதேனு நீயம்மா (மாய)

Share.

Leave A Reply