மதுரை வீதியில் மீனாட்சி! மங்கலமாய் அவள் வந்திடுவாள்!
தோளில் கிளியுடன் மீனாட்சி!
தேரோடும் வீதியில் வந்திடுவாள்! (மதுரை)
கருணை மழையே மீனாட்சி!
காண்போர்க்கு காட்சி தந்திடுவாய்!
சொக்கன் மனைவி மீனாட்சி!
சொர்க்க மார்க்கம் காட்டிடுவாள்! (மதுரை)
சங்கத் தமிழே மீனாட்சி! சங்கரனுடன் காட்சி தந்திடுவாய்!
பிறவி மருந்தே மீனாட்சி! பிறவாமை வரம் தந்திடுவாய்! (மதுரை)
பாண்டியன் மகளே மீனாட்சி!
பார் புகழச் செய்திடுவாய்! புதுநீரில் ஆடும் மீனாட்சி! புதுமைகள் செய்யப் புறப்படுவாள்! (மதுரை)
மூங்கில் உருளையில் மீனாட்சி!
ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுவாய்! ஆணவம் அழிக்கும் மீனாட்சி!
அடியவர் மனதில் தங்கிடுவாய். (மதுரை)