ஆத்திசூடி கதைகள்
51-சேரிட மறிந்து சேர்

பத்தாம் வகுப்பு அறையில் சலசலப்பாக இருந்தது. அதற்கு காரணம் புதிதாக வந்த மாணவன்.

‘A’பிரிவில் இருந்து வந்த மணிதான் காரணம்.

சுகுமார் இருந்த பெஞ்சில்
அமர வைத்தார் ஆசிரியர்.

சுகுமார் நன்றாகப் படிக்கும் மாணவன்.

மணி தன் பக்கத்தில் அமர்ந்து இருந்ததால். அவனுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

மணி சுமாராகப் படிக்கும்
மாணவன். பேசுவதிலும், வீணாக அரட்டை அடிப்பதிலும் அவனுக்குப் பிடிக்கும்.

தன் பக்கத்தில் இருந்த சுகுமாருடன் பேசி…பேசி,
நேரத்தை வீண்செய்தான்.

அந்த மாத மாதாந்திர தேர்வு வந்தது. அதில் சுகுமார் மதிப்பெண் குறைந்து இருந்தது.

இது எப்படி நடந்தது என யோசித்தான் சுகுமார்.

தன் அருகில் அமர்ந்த
மணி தன்னை அவன் வசப்படுத்தி பேசிக் கொண்டு இருந்தது தான் காரணம், எனத் தெரிந்து கொண்ட சுகுமார்.

ஆசிரியரிடம் சொல்லி வேறு பெஞ்சில் மாறி உட்கார்ந்து கொண்டான் சுகுமார்.

இதைத்தான் ஔவையாரும் “சேரிட மறிந்து சேர்” என்று அன்றே சொல்லிச் சென்று உள்ளார்கள்.

Share.

Leave A Reply