48- சுளிக்கச் சொல்லேல்

சிவாவும், விமலும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள்.

இருவரும் நல்ல நண்பர்கள். ஒன்றாகவே இருப்பார்கள்.

ஒரு நாள் விடுமுறை நாளில், வில் விட்டு விளையாடிக் கொண்டு இருக்கும் போது எதிர் பாராத விதமாக சிவாவின் கண்ணில் அம்பு குத்திவிட்டது.

கண்ணில் குத்திய அம்பு குச்சியை எடுத்துவிட்டு உடனடி சிகிச்சைக்கு சிவாவின் அம்மாவும், அப்பாவும் சென்று விட்டார்கள்.

அந்த சமயம் ஏன் இப்படி செய்தாய்! என்று விமலை அவர்கள் அம்மா… அடி அடி…என அடித்து திட்டினார்கள்.

விமலும் அடியை வாங்கிக் கொண்டே தெரியாமல் பட்டுவிட்டது அம்மா… என்று சொல்லியும் அவனை அடித்த அடியை விட அம்மா திட்டியது விமலுக்கு மனம் வலித்தது.

நண்பன் கண்ணை குத்திவிட்டோமே என்ற குற்ற உணர்வு ஒரு பக்கம்…

அம்மா அடித்து திட்டியது ஒரு பக்கம், சிவாவின் கண்வலியை விட விமலுக்கு மனம் மிகவும் வலித்தது.

விமலை அடித்து, திட்டிய அம்மாவிற்கும், இப்படி அடித்து… திட்டி விட்டோமே என்று மனம் வருந்தியது.

தவறாக ஒரு செயல் நடந்து விட்டாலும் பொறுமையாகப் பேசி சரி செய்ய வேண்டும்.

அதை விடுத்து திட்டி சண்டை போட்டு, கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் எல்லோர் மனமும் காயப்படும் என்பதை அன்றே புலவர் ஔவையார்” சுளிக்கச் சொல்லேல்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

Share.

Leave A Reply