நவராத்திரி பாட்டு சிருங்கேரி சாரதை

           பல்லவி

சத்ய ஜோதி
உன் வாசல் வந்தேன்
உன் தரிசனம் தாரும் அம்மா (சத்ய)

       அனுபல்லவி

சிருங்கேரி சாரதை
ஸ்ரீ ரங்கநாயகி ஜெயதுர்கா பரமேஸ்வரி (சத்ய)

                சரணம்

துங்கா நதியில்
பாவ விமோசனம் தரும் சக்தி தலமே
கர்ப்ப தவளைக்கு பாறையில்
சர்ப்பம் குடை பிடிக்க பிரம்மா, விஷ்ணு, சிவன் காட்சி தந்து ஆட்சி செய்யும் சாரதை (சத்ய)

               சரணம்

காளிகாம்பா! துர்காம்பா! ஸ்ரீ பார்வதி! ஆஞ்சநேயா! சந்திர மௌலி ஈஸ்வரா!
காலபைரவா! ஸ்ரீ சாரதை சாரதாம்பா! (சத்ய)

Share.

Leave A Reply