ஆத்திசூடி கதைகள்
50- செய்வன
திருந்தச்செய் 

காலையில் எழுந்த ஜெயா வாசல் கூட்டித் தெளித்து கோலம் போடுவதை தினமும் பார்த்துக் கொண்டு இருந்த அவள் மகள் சங்கரி…

அம்மா நான் கோலம் போடுகிறேன் என்றாள்.

இங்கே வா சங்கரி என்று அழைத்த ஜெயா! கோலப் பொடியை எடுத்து எப்படி போடுவது எனச் சொல்லிக் கொடுத்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

கோலப் பொடியை எடுக்க சங்கரி புள்ளி வைத்து கோலம் போட்டாள்.

கோலம் சரியாகப் போட்டு விட்டாள். ஆனால், கோலப் பொடியை சிதற விட்டு அங்கும், இங்கும் சிதறி இருந்ததால் கோலத்தின் நேர்த்தி இல்லாமல் இருந்தது.

அம்மாவிடம் சென்ற சங்கரி, அம்மா! கோலம் போட்டு விட்டேன் என்றாள்.

மகள் போட்ட கோலத்தை வந்து பார்த்த ஜெயா! கோலத்தின் அழகை அவள் சிந்திய கோலப் பொடி கெடுத்து விட்டதை கண்ட ஜெயா…

சங்கரி கோலம் போட்டு விட்டாய். ஆனால், அதன் நேர்த்தி, அழகு, சிந்தாமல் போடுவதில் தான் இருக்கிறது.

எந்த ஒரு வேலை செய்தாலும் முழு மனதுடன் செய்யும்போது அதன் திறன் மேம்படும்.

கோலப் பொடியை சிந்தாமல் போட வேண்டும். போடப்… போட அழகாக போடுவாய் என்றால் ஜெயா.

சரி அம்மா! என்ற சங்கரி தன் அம்மா சொன்ன வார்த்தையை பிடித்துக் கொண்டாள்.

மறுநாள் மிகச் சரியாக அழகாக போட்டாள் சங்கரி.

மகளை அனைத்து முத்தம் கொடுத்தாள் ஜெயா.

புலவர் ஔவையாரும் “செய்வன திருந்தச்செய்” என்று செய்யும் வேலைகளை சரியாகச் செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார். 

Share.

Leave A Reply