பல்லவி

திருக்கல்யாணம் காணவே வாருங்கள்
முருகனின் திருக்கல்யாணம் காணவே வாருங்கள்
தெய்வானை, முருகன் திருக்கல்யாணம் காணவே வாருங்கள்
கல்யாணம் காணவே வாருங்கள்.

           சரணம்
அசுரனை வென்று தேவரை காத்து
வெற்றி வாகை சூடிய முருகனின்
கல்யாணம் காணவே வாருங்கள்
திருக்கல்யாணம் காணவே வாருங்கள்

           சரணம்

திருமால், பிரம்மன் முருகனை அழைத்து வர
திருமகள், சரஸ்வதி மணமகளுடன் இணைந்து வர
வாத்திய மேள மங்கல இசையுடன்
சிவன், பார்வதி, தேவர்கள் சூழ
கல்யாணம் காணவே வாருங்கள்
திருக்கல்யாணம் காணவே வாருங்கள்

          சரணம்

மாப்பிளை முருகன் மணமேடையில் அமர
மணமகள் தெய்வானை
அருகில் அமர
அண்ணன் கணபதி வீரபாகு சூழ
கல்யாணம் காணவே வாருங்கள்
முருகனின் திருக்கல்யாணம் காணவே வாருங்கள்

         சரணம்

மாப்பிள்ளை  முருகன் மாங்கல்யம் அணிவிக்க
மாலை மாற்றி அம்மி மிதித்து அருந்ததி பார்க்க
தேங்காய் உருட்டி, பூப்பந்து விளையாடும்
கல்யாணம் காணவே வாருங்கள்
முருகனின் கல்யாணம் காணவே வாருங்கள்

             சரணம்

சீர் வரிசைகள் பார்த்து
பந்தியில் அமர்ந்து பட்சணம் உண்டு
இந்திரன், இந்திராணி
கொடுக்கும்
தாம்பூலம் தரித்து மொய் எழுதும்
கல்யாணம் காணவே வாருங்கள்
முருகனின் திருக்கல்யாணம் காணவே வாருங்கள்

            சரணம்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தமே
முருகன் மணமகன் ஆனாரே
தெய்வானை மணமகள் ஆனாளே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.

Share.

Leave A Reply