49- சூது விரும்பேல்
சுந்தர் அரசுப் பணியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
மனைவி சுந்தரி, மகன் சுதாகர் என நல்ல குடும்பம்.
தென்றலாய், சந்தோசமாகப் போய்க் கொண்டு இருந்த வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.
சுந்தர் வீட்டிற்கு தாமதமாக வர ஆரம்பித்தான். சம்பளப் பணம் குறைவாக கொடுத்து விட்டுச் செலவை சமாளிக்கச் சொன்னான்.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் தெரியாமல் தடுமாறினாள் சுந்தரி.
பின் கடன் வாங்க தொடங்கினான். கடன் வட்டி குட்டி போட்டு கடன் தொகை அதிகமானது.
கடனை அடைக்க மற்றவரிடம் கடன் வாங்கி பின் அதுவும் கட்ட முடியாமல் தடுமாறினான்.
நல்லா இருந்த குடும்பம் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் அவன் சூதாடியதுதான் என்று தெரிந்த சுந்தரி மகனை அழைத்துக் கொண்டு அவள் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டாள்.
செய்வது அறியாது நின்றான் சுந்தர்.
தர்மர் சூதாடி கெட்ட மகாபாரதம் படித்தும், தெரிந்தும் கூட சூது விளையாடக் கூடாது என்பதை இன்னும் உணரவில்லை என்பதை ஔவையாரும் “சூது விரும்பேல்” என்று சொல்லிச் சென்று உள்ளார்கள்.
