19- கங்கா விசர்சனமூர்த்தி

       கந்தபுராணம்
“அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை தன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தான் மீளப் பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை
முடிமேல்தங்கி
இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான்.”

அயோத்தி நகரை ஆண்டு வந்த சகரன் என்னும் அரசன் செய்த அசுவமேத யாகத்தின் குதிரையைக் கண்ட இந்திரன் மனம் பொறுக்க முடியாமல் தன் வாழ்வுக்குத் துன்பம் வந்ததே என்று மனம் நொந்து போனான்.

வஞ்சனையால் பாதாளத்தில் கடுமையான தவம் புரியும் கபில முனிவர் பக்கத்தில் அக்குதிரை கட்டிப் போட்டான்.

அயோத்தி மன்னனின் அறுபதினாயிரம் மக்களும் அம்மன்னனின்   கட்டளைப்படி உலகம் முழுவதும் அக்குதிரியை தேடினர்.

எங்கும் அது கிடைக்காததால் பாரைத் தோண்டிப் பாதாளத்தை அடைந்தனர்.

கபிலர் பக்கத்தில் கட்டியிருந்த குதிரையைக்ண கண்டனர். உடனே, அவர்கள் இக்கள்வனே நமது குதிரையைக் கவர்ந்து வந்துள்ளான். நம் மன்னனின் யாகத்தைப் போக்கக் கருதியவன் இவனே என்று கோபம் கொண்டு அவரைத் துன்புற வைத்தனர்.

இதனால் முனிவர் கோபம் கொண்டு விழித்தீயினால் அம்மன்னனின் புதல்வர்கள் அறுபதினாயிர வரும் சாம்பலாயினர்.

அச்செய்தியை அவர்களுடன் சென்ற தூதுவர் அரசனிடம் சொன்னார்.

இதைக் கேட்ட அரசன் தனது சிறந்த மகன் அஞ்சுமானை அழைத்து, “என் புதல்வர் இறந்தாலும் எடுத்த காரியத்தை விடலாமோ?”  என்றார்.

உடனே, அஞ்சுமான் பாதாளம் சென்று கபிலர் முன்னிருந்த சாம்பல் மலையைக் கண்டு நடுங்கினான்.

பின்பு முனிவரை வணங்கி பிழையை மன்னிக்க வேண்டினான்.  

முனிவர் முன் வந்து குதிரையை கொடுத்தார். அதைப் பெற்ற அஞ்சுமான் குதிரையைத் தந்தையாரிடம் கொடுத்து அந்த யாகத்தை முடித்தான்.

அவன் வம்சத்தில் வந்தவன் தான் பகீரதன். அவன் தனது முன்னோர்கள் முனிவர் முன் சாம்பலாகி மடிந்து நரகத்தில் மூழ்கியுள்ளதை அறிந்தான்.

அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணி பிரம்மனை நோக்கி பதினாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தான். பகீரதன் பண்ணிய பெருந்தவத்தின் பயனாய் பிரம்மன் அவன் முன் தோன்றி “ஆகாய கங்கை அவர்கள் மேல் பட்டால் அவர்கள் சொர்க்கத்தை அடைவார்.”

ஆனால், அக்கங்கை உலகிற்கு வந்தால் அதன் வேகத்தை சிவபெருமானால் தான் அடக்க முடியுமே தவிர வேறு எவராலும் அடக்க முடியாது. எனவே, நீ சிவபெருமானை நோக்கி தவம் செய்க என்று கூறி மறைந்தார்.

பகீரதன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தான். அதன் பயனாய் சிவபெருமான் அருள் பெற்றான்.

பின் கங்கையை நோக்கி தவம் செய்தான். கங்கை பெண் வடிவம் ஏற்று வந்து என் வேகம் அதிகமானால் என்னை தாங்கும் படியாக சிவபெருமானை நோக்கி தவம் செய்க என்றாள்.

உடனே அவன் சிவபெருமாள் நோக்கி 
தவம் செய்ய அப்போது சிவபெருமான் காட்சி தர, கங்கை பெண் வடிவாக வந்து கூறியதை சொன்னான் உடனே சிவபெருமான் காக்கிறேன் என்று வரம் கொடுத்தார்.

சிவபெருமான் கொடுத்த வரத்தை பெற்று மீண்டும்
தவம் செய்தான் கங்கை இப்போது மூன்று உலகமும் அச்சி, அலரும் வண்ணம் ஆரவறித்து கொண்டு வந்தாள்.

அப்போது, சிவபெருமான் சிந்தாமல் தன் தலைமுடியில் கங்கையை அணிந்தார்.

பகீரதன் கங்கையை காணாமல் கலங்கி  நின்றான்.  உடனே சிவபெருமான் அவனை நோக்கி “நமது சடைமுடியில்  இருக்கிறாள் அஞ்சாதே” என்று திருவாய் மலர்ந்து கூறினார். சிவபெருமான் அதில் இருந்து சிறுதுளி விட கங்கை சிவபெருமான் சடையிலிருந்து நிலத்தில் வந்து இறங்கினாள். இவ்வாறு வந்த கங்கையைப் பகீரதன்   தன் கையில் ஏந்தி இறந்தவரை நல்லுலகில் சேர்ப்பதற்காக விரைந்து சென்றான்.

அவ்வாறு செல்லுயில் அகங்கையின் வேகத்தால் ஐந்து முனிவர் நடத்தி வந்த யாகம் அழிந்தது. அதனால், கோபம் கொண்ட அம்முனிவர்கள் அக்கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர்.

உடனே, பகிரதன் கங்கை காணாமல் திகைத்தான். உடனே அவன் ஐந்து முனிவரின் முன் பணிந்து முன் நடந்ததை கூறினான்.
 
அவர்கள் மனம் இறங்கி தன்னது செவி வழியாக அக்கங்கையை விட்டமையால் ஜாந்நவி  எனப் பெயர் பெற்றது. பிறகு இறந்து கிடந்தவர்களின் சாம்பலில் அக்கங்கை பட அவர்கள் நல்லுலகை அடைந்தனர்.

பகீரதனால் கொண்டு வரப்பட்டதால் கங்கைக்கு பாகீரதி எனவும் ஒரு பெயர் வழங்கப்பெற்றது.

சிவப்பிரசாதத்தினால் பிரம்மன் தனது மனோவதி நகரிற்குக் கொண்டு போன கங்கை பகீரதன் வேண்டு கோளால் பூமிக்கு வந்தது.

அவ்வாறு வருகையில் உலகம் அழியாமல் அக்கங்கையை தமது சடையில் ஏற்று பகீரதன் வழிபாட்டிற்கு மனம் இறங்கி அதில் ஒரு துளிவிட்டார். அதனால், சிவபெருமானுக்கு
கங்காவிசர்சன மூர்த்தி என பெயர்  பெற்றார். அவரை வணங்கி நாமும் வாழ்வில் எல்லா நல்லன்களும் பெறுவோம்.

Share.

Leave A Reply