கலா என்று அழைத்தார் ஆசிரியர்.
எழுந்து ஆசிரியரிடம் சென்றாள் கலா.
வீட்டுப் படத்தை ஒழுங்காகச் செய்யாமல் பாதியில் விட்டு இருக்கிறாய் என்றார் ஆசிரியர்.
டீச்சர் எழுதுவதற்கு நேரம் போதவில்லை என்றாள் கலா.
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் என்றார் ஆசிரியர்.
24 மணி நேரம் என்றாள் கலா.
எல்லோருக்கும் அதே நேரம் தானே! உனக்கு மட்டும் பத்த வில்லையா? என்ற ஆசிரியர். கலாவைப் பார்த்தார்.
கலா படிக்க வேண்டிய நேரத்தில் விளையாடிவிட்டு வீட்டுப் பாடத்தை அவசர…அவசரமாக எழுதி, பாதியில் விட்டுவிட்டாள், அதன் விளைவுதான் ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டாள்.
கலா எந்த…எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ? அந்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் படுவதே அதற்கு காரணம். அவளுக்குத் தெரிந்தும் அதை மாற்றிக் கொள்ள முடியாமல் அவளுடைய சோம்பல் தடுக்கிறது.
இதைத்தான் புலவர் ஔவையார் பாட்டியும் முன்பே, சொல்லி இருக்கிறார்கள் “சோம்பித் திரியேல்” என்று.
