அமெரிக்காவில் எழுதிய கவிதைகள்.
அமெரிக்கா கங்கை
1-பள்ளி நீரோடையில் பளபளக்கிறது
காசு.
2-வானம் பூத்தது
மரங்கள் மௌனமாக சலசலக்கும் நீர்.
3-நீள வானத்தில்
மேகம் தவழ்ந்தது
சூரிய வரவு.
4-குலுங்கி குலுங்கி சிரித்தது
குழந்தை நடந்ததால்
கொலுசு மணி.
5-மேகம் நீர் கொடுக்க
அணை தேக்கி வைக்க பசுமைப் புரட்சி.
6-ஓடும் தண்ணீர்
உயர்ந்த மரங்கள்
கண்ணுக்கு விருந்து.
7-மடை திறந்த வெள்ளம்
மகிழ வைக்கும் மரங்கள் காட்டு வளம்.
8-விண் விளையாடியது
மண் குளித்தது
மரம் நடனமாட.
9-புல்லின் வருகைக்கு
பன்னீர் தெளித்தது
கோடை மழை.
10-மிருகங்களைப் பார்க்க மனிதக் கூட்டம்
அன்னையர் தினம்.
தொடரும்
கவிஞர் ச. மல்லிகா