ஆத்திசூடி கதைகள்
53- சொற் சோர்வு படேல்

ரயில் ஓடிக் கொண்டு இருந்தது. சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த பெண்மணி தனது உறவினருடன் பேசிக்கொண்டு வந்தார்.

குடும்ப நிகழ்வுகளை அப்படியே சொல்லி மன வருத்தம் கொண்டும் அருகில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் ஓடும் ரயிலில் உரத்த குரலில் பேசிக்கொண்டு வந்தார்கள். நீண்ட நேரம் பேசிய பின் அலைபேசியை வைத்தவர்.

எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணைப் பார்த்தாள்.

எதிரில் இருந்த பெண் கேட்டார்கள் உங்கள் பையன் வீட்டில் இருந்து வருகின்றீர்களா? என்று ஆமாம்! என்றவர் மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டார்.

கணவர் இறந்து விட்டார். மகன் வீட்டில் இருக்கிறேன்.
வேலைகளை எல்லாம் தாமே செய்வதாகவும், மருமகள் செய்வது சுத்தமாக இருக்காது  என புகார் பட்டியல் வாசித்தவர். அவர்கள் புகைப் படங்களையும் காண்பித்தார்.

நல்லா இருக்கட்டும் என்ற எதிர் அமர்வில் இருந்த பெண். உங்களை மகன்கள் பார்த்துக் கொள்கிறார்களே! என சந்தோசம் அடையுங்கள்.

எத்தனையோ பேர் பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

உறவினர் எத்தனை நாள் உங்களை வைத்துக் கொள்வார்கள். குறை சொல்வதை விட்டு நிறைவைப் பாருங்கள் என்றவுடன்….

மகன் படித்து வேலைக்குப் போய் தான் நல்ல நிலைக்கு வந்தோம். மருமகள் கெட்டிக்காரப் பெண். ஒரு வயதில் மகன் இருப்பதால் அவனைப் பார்க்க வேலையை  விட்டு விட்டாள். என்றும் ஒரு வருடம் சென்ற பின் வேலைக்குப் போவாள்.

நல்ல பக்தி, இடம் வாங்கி வீடு கட்ட  யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்போது…

அலைபேசி அழைத்தது,  அம்மா இறங்கும் இடம்  வரப்போகிறது பத்திரமாக இறங்கிச் செல்லுங்கள் எனமகன் சொல்ல…

சரி என்று பேசி முடித்த அந்தப் பெண் எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணைப் பார்த்து இனி நேர்மறை எண்ணத்துடன் பேசுவேன், குறைகளை சொல்ல மாட்டேன். உங்களை மாதிரி இதுவரை யாரும் என்னிடம் சொல்லவில்லை உங்களை மறக்க மாட்டேன் என்று சொல்லி கீழே இறங்க தயாரானார்.

ஔவையாரும் “சொற் சோர்வு படேல்”  என்று கூறி இருக்கிறார். பிறரிடம் பேசும் பொழுது குற்றம் இல்லாமலும் உறுதியுடனும் பேச வேண்டும் என்று.

Share.

Leave A Reply