அத்தரி பாச்சா கொழுக்கட்டை
“தாத்தா…. தாத்தா இங்கே பாருங்கள். இவன் கடைக்கு போகவில்லை என்று இவனது அம்மா எப்படி அடித்திருக்கிறார்கள் பாருங்கள் தாத்தா” என்றனர்.
பாவம் இவன் முதுகு எல்லாம் வீங்கி கிடைக்கிறது. என்றான் ஒரு சிறுவன்.
” அப்படியா… நீ அம்மா சொன்னதை கேட்டிருக்கலாம் இல்லையா?” கேட்டிருந்தால் இந்த அடி விழுந்திருக்காது அல்லவா?” என அன்புடன் வினாவினார் தாத்தா.
“சரி உனக்கு ஒரு கொழுக்கட்டை கதை சொல்கிறேன் கேள்” என்றவர் சொல்ல ஆரம்பித்தார்.
“ஒரு ஊரில் மைதிலி, முரளி என்ற தம்பதிகள் இருந்தார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆனது” ஒரு நாள் மைதிலி …
தன் கணவனிடம் எங்க ஊருக்குப் போய் அம்மா, அப்பாவை பார்த்து வரலாம். எனக்கு அவர்கள் நினைவாக இருக்கிறது என்றாள்.
புது மனைவி ஆசைப்பட்டு விட்டாளே என்று முரளியும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் ஊருக்குச் சென்றான்.
மகள், மருமகனைப் பார்த்த மாமனாரும், மாமியாரும் ஆனந்தம் அடைந்தனர். புதுமருமகன் திடுதிப்பென வந்து நிற்பதைப் பார்த்து கையும் ஓடவில்லை, காலும் ஓட வில்லை.
என்ன சாப்பிடக் கொடுப்பது என யோசித்த மாமியார் அரிசியை ஊறவைத்து ஆட்டி கொழுக்கட்டை செய்து சுடச்சுடக் கொண்டு வந்து கொடுத்தாள்.
முரளியும் எடுத்து சாப்பிட்டான் மிகவும் நன்றாக இருந்தது. புது மாப்பிள்ளையாக இருப்பதால் அதிகமாக சாப்பிட வெட்கமாக வேறு இருந்தது.
மைதிலியும், “சும்மா சாப்பிடுங்கள் என எடுத்து வைத்ததும்.” எனக்குப் போதும் என்று சொல்லி கொஞ்சமாகவே சாப்பிட்டேன் முரளி.
இரண்டு நாட்கள் தங்கி விட்டு வீட்டிற்குச் செல்ல கிளம்பினார்கள். வந்த அன்று செய்தார்களே அதன் பெயர் என்ன என்று மைதிலியிடம் கேட்டான் முரளி.
அவளும் ‘கொழுக்கட்டை’ எனப் பெயர் சொன்னாள்.
முரளிக்கு அம்மா, அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். எனவே, கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டது இல்லை.
அதன் சுவை நாக்கில் இன்னும் இருந்தது. ஊருக்குப் போனவுடன் மனைவியிடம் செய்து தரச் சொல்லவே பெயர் கேட்டான்.
அவனுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். எனவே, மனதிற்குள் ‘கொழுக்கட்டை’ ‘கொழுக்கட்டை எனச் சொல்லிக் கொண்டே வந்தான்.
அவர்கள் ஊரை ஒட்டினாற் போல் சின்ன ஓடை ஒன்று உள்ளது. அந்த ஓடையை கடந்தால் வீடு வந்து விடும்.
இருவரும் ஓடைக்கு அருகில் வந்து விட்டார்கள். ‘கொழுக்கட்டை… கொழுக்கட்டை’ என்று சொல்லிக் கொண்டு வந்தவன். ‘அத்தரிப்பாச்சா’ என்று சொல்லிய படி தாண்டினான்.
சற்று நேரத்தில் கொழுக்கட்டை மறந்து “அத்தரிப்பாச்சா” என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
வீடும் வந்துவிட்டது பூட்டைத் திறந்த உள்ளே போனார்களோ, இல்லையோ எனக்கு “அத்தரிப்பாச்சா” செய்து கொடு என்று மனைவியிடம் கேட்டான் முரளி.
” என்னங்க புதுப்பேராகச் சொல்லுகிறீர்கள். இப்படி நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?” என மைதிலி முழித்தாள்.
“உங்க அம்மாவிற்கு செய்ய தெரிந்திருக்கிறது. நீ தெரிந்து கொள்ளவில்லையா? எனக்கு செய்து கொடு” என பிடிவாதம் செய்தான் முரளி.
”எனக்கு செய்யத் தெரியாது என்றாலும் மைதிலி” எனக்கு செய்து கொடு என்றான் முரளி.
இப்படி பேச்சு முற்றி! முரளிக்கு கோபம் வந்து மைதிலியை அடி…. அடி என
அடித்துவிட்டான்.
மைதிலி அடியை வாங்கிக் கொண்டு அழுதபடி தூங்கிப் போனாள்.
காலையில் பக்கத்து வீட்டில் உள்ள மாமி இவர்கள் வீடு திறந்து இருப்பதை பார்த்துவிட்டு எப்போ ஊரிலிருந்து வந்தீர்கள் மைதிலி எனக் கேட்டபடி உள்ளே வந்தாள்.
மைதிலி முகம், கை, கால் எல்லாம் வீங்கி படுத்திருந்தாள்.
” என்னடி இப்படி படுத்து இருக்கிறே உடம்புக்கு என்ன என்று விசாரித்தாள்.
“ஒன்றும் இல்லை மாமி” என மைதிலி சொல்ல மறுத்தாள்.
உடனே முரளி கோபத்தில் நான் சொல்வதை இவள் கேட்பது இல்லை மாமி.
அதுதான் கோபத்தில் அடித்து விட்டேன் என்றான் முரளி.
ஏன்டா அப்பா! கோபம் வந்தா இப்படியா ஆத்துக்காரியை அடிப்பது. “கொழுக்கட்டை.. கொழுக்கட்டையா” வீங்கி விட்டது என்றாள் மாமி.
” மாமி….மாமி இப்ப சொன்னீங்களே அதுதான் செய்து கேட்டேன் .அவள் தெரியாது என்கிறாள் என்றான்.
என்னடாப்பா! கொழுக்கட்டையா செய்து கேட்டே என்றாள் மாமி.
“ஆமாம் மாமி என்றான் முரளி”
இதைக் கேட்ட மைதிலி அடியின் வேதனையையும் மறந்து. விழுந்து…. விழுந்து சிரித்தாள்.
மாமியும் சேர்ந்து சிரித்தாள்.
முரளி! அசடு வழிய நின்று கொண்டிருந்தான்.
பின்பு என்ன மாமி வந்ததாள் பிரச்சனை முடிந்தது.
கொழுக்கட்டை செய்து கொடுத்தாள் மைதிலி.
முரளியும் சந்தோசமாக சுவைத்து தின்றான்.
இதைக் கேட்ட சிறுவர், சிறுமிகளும் சிரித்தார்கள்.
சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி சென்றார்கள்.