57-திருமாலுக்
கடிமைசெய்
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்த மாலா, அன்று மாலை தனது மகன், மகள்களை அழைத்துக் கொண்டு சீனிவாசப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல தயார் ஆனாள்.
அப்போது பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளிடம் முன்பை சொல்லி இருந்தாள். கோயிலுக்குச் செல்வோம் என்று.
பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமிகளும் தயாராகி விட்டார்கள்.
மாலா எல்லோரையும் அழைத்துக் கொண்டு சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு நடந்து சென்றார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோயிலில் கூட்டமாக இருந்தது.
வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.
சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு முன்பே வந்த சில வயதான பெண்கள் கோயிலின் பின்புறம் உள்ள துளசித் தோட்டத்தில் துளசி, மலர்களைப் பறித்து மாலையாக கட்டிக் கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்த சிறுவர்கள், இவர்கள் பூ கட்டுப்பவர்களா? என்று கேட்டனர்.
இவர்கள் திருமாலுக்கு பணி செய்ய வேண்டும் என்று உலவாரப் பணி செய்கிறார்கள்.
கோயிலைக் கூட்டி சுத்தம் செய்வது. தூப,தீப விளக்குகளை தூய்மை செய்து விளக்கு ஏற்றுவது, பூக்களைப் பறிப்பது, மாலையாக கட்டுவது இப்படி ஆளுக்கு ஒரு வேலையாக செய்வார்கள். என்றாள் மாலா.
நம்மைக் காக்கும் “திருமாலுக் கடிமைசெய்” என்று புலவர் ஔவையாரும் கூறி இருக்கிறார்கள் என்றாள் மாலா.
எங்களை நீங்கள் திருமால் கோயிலுக்கு அழைத்து வந்து வணங்க வைப்பது கூட அவருக்கு சேவை செய்வதற்கு சமம் தானே என்றனர் சிறுவர்கள்.
ஆமாம் என்றாள் சிரித்தபடி மாலா.
