காலையில் கதிரவன் ஒளி பட்ட பின்பு தான் எழுந்தார்கள். வேடுவச்சு இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தாள்.வேடன் சங்கரை மரத்தில் இருந்து கீழே இறக்கினான். சிறிது தூரம் வரை வழித் துணையாக வந்து “பத்திரமாக போ தம்பி” என வழி அனுப்பி வைத்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நல்ல உள்ளம் என நினைத்தபடி விடைபெற்றான் சங்கர். ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஒற்றை காலில் நின்றபடி சிவனை நினைத்து தவம் செய்தான் சங்கர் .பல ஆண்டுகள் நிறுத்தாமல் தவம் செய்தான் சங்கர். “ஓம் நமச்சிவாய” என்ற ஒலி கயிலாயத்தில் கேட்டது. சிவனைப் பார்த்த பார்வதி கேட்டாள். “இந்த ஒலி பல ஆண்டுகளாக கேட்கிறது”. நீங்கள் செவிமடுக்காமல் இருக்கிறீர்களே சுவாமி! சிறுவனாக இருந்தாலும் தான் வந்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் விடாது உங்களை வணங்குகிறான். இன்னும் சோதிக்க வேண்டாம். வாருங்கள் அவனுக்கு தரிசனம் கொடுப்போம். என்று பார்வதி கூறினாள். சிவனும்,…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
மகனே! “நாம் செய்யும் அறம் மட்டுமே அடுத்த பிறவிக்கும் நம் உடன் கூட வரும். ஒருவன் முற்பிறவில் தர்மம் செய்யாமல் இருந்தால் மறுபிறவியிலும் அதன் பயனை அடைய நேரும்” என்ற அம்மா விளக்கினாள்.அது எப்படி இந்தப் பிறவியில் செய்வது அடுத்த பிறவிக்கு சேரும். என்பதை எப்படி நம்புவது என்று வாதிட்டான் சங்கர். எல்லாம் கடவுளின் சித்தம் அவர் இன்றி அணுவும் ஆசையாது.எல்லாம் அவன் செயல் என்று மீனாட்சி கடவுளை புகழ்ந்தாள். “அந்தக் கடவுள் எங்கு இருப்பார் நான் அவரைப் பார்த்து என் சந்தேகத்தை போக்காமல் வரப் போவதில்லை” என்று சங்கர்உறுதி பூண்டான். மகனின் உறுதியைக் கண்ட தாய் இதுவும் அவன் செயலே என எண்ணினாள். “சங்கர் காட்டுக்குள் சென்று அமைதியான இடத்தில் ஒற்றைக்கால் தவம் செய்தால் சிவன் உன் முன் காட்சியளிப்பார் அப்போது உன் சந்தேகத்தைக் கேள், என்று கூறினாள் மீனாட்சி. தன் மகனுக்கு புளியோதரை செய்து கொடுத்து வழி அனுப்பினாள்.…
51- ஏற்றம் பெற விரும்பின் சீற்றம் குறைத்து சீராக்கி நாட்டம் கொண்டு உழை. 52-ஆண்மைக்கு உடல் வலிமை பெண்மைக்கு மன வலிமை நேர்மைக்கு மெய்வலிமை. 53-காக்காய் எங்கள் சாதி குருவி அணில் எங்கள் தோழி. 54- ஊருக்குப் போகும்போது முகம் பார்க்காமல் வாடும் தொட்டில் செடி. 55- மூன்று கோடுகள் இந்திய அணில் கோடு இல்லாமல் அமெரிக்கா அணில் ராமர் பாதம் படாததால். 56- நீல வானத்தில் வெள்ளை மேகம் தவழ்ந்ததுசூரிய வரவால். 57-குலுங்கி குலுங்கி சிரித்தது குழந்தை நடந்ததால் கொலுசு மணி. 58- மேகம் நீர் கொடுக்க அணை தேக்கி வைக்க பசுமை புரட்சி. 59-ஓடும் தண்ணீர் உயர்ந்த மரங்கள் கண்ணுக்கு விருந்து. 60- மடை திறந்த வெள்ளம் மகிழ வைக்கும் மரங்கள் காட்டு வளம்.
மதுரைக்கு அருகில் அப்பளப்பட்டி என்னும் சிற்றூர் உள்ளது. அவ்வூருக்கு செல்லும் வழியில் நம்மை வரவேற்பது குடிதண்ணீர் குளம். சிறிது தூரம் நடந்தால் கூரை, ஓட்டு வீடுகள் கொண்ட ஒரு சிறிய கிராமம். அதுதான் அப்பளப்பட்டி ஊரின் மையப்பகுதியில் ஒரு பிள்ளையார் கோயில் அதன் அருகில் சங்கிலி கருப்பன் கோயிலும் உண்டு.சற்று நடந்தால் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க ஒரு பள்ளியும், அதன் அருகில் சவுக்கையும், அதற்கு நிழலும், காற்றும் தர அரச மரமும் இருக்கும். அந்த சவுக்கையில் தான் ஊர் நியாயங்கள். ஊர் கதைகள். பேசுவார்கள். வேலை வெட்டி இல்லாதவர்களும், வேலை முடிந்து போய் ஓய்வு எடுப்பவர்களும் கூடும்இடம். வெட்டி கதைகள் பேசாமல் அங்கு விளையாடும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு நீதி கதைகள் கூறி அவர்களை உற்சாகப்படுத்தி சிந்திக்க வைத்தார் நம் கதாநாயகன். கதாநாயகன் என்றவுடன் உங்களுக்கு அவர் எப்படி இருப்பார் என்று நினைக்கத் தோன்றும். அவர் ரஜினி மாதிரி! இல்லை…
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.
தை பொங்கல் வண்ணக் கோலம் வெளி வாசலில் மாவிலை தோரணம் நிலை வாசலில் தோகை கரும்பு பூஜை அறையில் மஞ்சள் கொத்து பானை கழுத்தில் அன்பு என்ற பாலை ஊற்றி பண்பு என்ற அரிசி இட்டு நேசம் என்ற வெல்லம் இட்டு பாசம் பொங்க பொங்கல் வைப்போம். பாலைத் தரும் பசு கன்றுக்கும் ஏர் உழும் காளை மாட்டிற்கும் வாழ உதவும் இயற்கை பூமிக்கும் நன்றி சொல்லி பொங்கல் வைப்போம். கோதைப் பொங்கல் மார்கழியில் பொங்குது! கூடைப் பொங்கல் மார்கழியில் பொங்குது! பால் பொங்கல் தையில் பொங்குது! குப்பிப் பொங்கல் தையில் பொங்குது.