ஆத்திசூடி கதைகள்
59- துன்பத்திற்
கிடங்கொடேல்
உடல் பயிற்சி வகுப்பு. அந்த வகுப்பில் தோட்ட வேலைகளையும் செய்வார்கள்.
அன்று ஆசிரியர்!
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிக்கூடத் தோட்டத்தை சுத்தம் செய்து தண்ணீர் விடும் வேலைகளைப் பிரித்து குழுவாகச் செய்யச் சொன்னார்.
பாபுவுக்கு தண்ணீர் விடும் வேலை கொடுத்தார் ஆசிரியர்.
ஆனால், பாபுவோ ரோஜா செடியில் உள்ள காய்ந்த இலைகளை எடுத்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த ஆசிரியர், பாபு ரோஜா செடியில் உள்ள முள் குத்திவிடும். நீ தண்ணீர் மட்டும் ஊற்று என்றார்.
சரி சார் என்ற பாபு தண்ணீர் எடுக்க சோம்பல் பட்டுக்கொண்டு ரோஜா இலைகளை கிள்ளி கொண்டு இருந்தான். அவன் எதிர்பாராத விதமாக கையில் முள் குத்தி விட்டது. அதிலிருந்து ரத்தம் வந்தது.
அதை கவனித்து விட்ட ஆசிரியர். முன்பே சொன்னேன் அல்லவா! என்றவர், முதலுதவி செய்தவர்…
“துன்பத்திற்
கிடங்கொடேல்” என்று ஔவையார் கூறி இருக்கிறார். எளிமையான வேலையை கொடுத்தால் முள் செடியில் கையை வைத்து துன்பத்தை வரவழைத்துக் கொண்டாய் என்றவர். வகுப்பறைக்கு போகச் சொன்னார் பாபுவை ஆசிரியர்.