11-வண்ண மரங்கள்
பூத்து மலர்ந்தது
கோடை காலம்.
12- உரைந்த பனி
உதிக்காத சூரியன்
பனிக் காலம்.
13- வண்ண ஓவியம்
தீட்டியது வானம்
மாலை நேரம்.
14- ஏரிவிட்டு ஏரிக்குப்
பறந்தது….
வாத்து.
15- விண் முட்டியது
கீச்.. கீச்.. சங்கீதம்
வெட்டாத மரம்.
16- ஒற்றைக் காலில்
தவம் செய்தது
செங்கால் நாரை.
17- புத்தகம் இல்லாத பை படிக்கப் போகும் மாணவர் அமெரிக்கா கல்வி.
18- ஊஞ்சலாடும் உணவு
பறவைகளின்
சாப்பாட்டுக் கூடம்.
19- அன்புடன்
பகிர்ந்து உண்ணும்
பறவை கூட்டம்.
20- பழமையான வீடுகள்
வண்ண மயமாய்
ஓவியத்தில்.
மலரும்.