மேகம் பிளந்தால் தான் மழை பொழியும்
மண் பிளந்தால் தான் பயிர் வளரும்
விதை பிளந்தால் தான் செடி முளைக்கும்
இவை அதிசயம், கடவுள் தந்த பரிசு என்றால்
தன் உடல் பிளந்து ஓர் உயிரை தரும்
பெண் அந்த கடவுளுக்கே கிடைத்த பரிசு
பெண் என்பவள் பிறப்பை தர பிறந்தவள் அல்ல
அவள் இந்த உலகிற்கு சிறப்பை தர பிறந்தவன்
தன் சக்தியை தானே அறியா ஆணைப் போன்றவள்
பெரும் புயலையும் தாங்கி சிறு புன்னகைத்து செல்வாள்
எத்துயர் வந்தாலும் தளராது நிற்கும் நாணல் அவள்
வெடித்து சிதற ஆயிரம் எரிமலையே உள் இருந்தாலும்
சிறு அலையாய் காலைத் தொடும் அக்கடல் போன்றவள்
பெண்ணின் பெருமையை இவ்வுலகம் உணர வேண்டும்
பெண்ணின் வலிமையை இவ்வுலகம் அறிய வேண்டும்
இதுவே பெண்ணினத்தின் நீண்ட கால கோரிக்கை
பெண் என்றால் புன்னகை மட்டும் அல்ல
அவள் பொறுமை கடலை விட ஆழம்
அவள் கனவு வானத்தை விட உயரம்
பெண்ணை மதிப்போம் அவள் பெருமையை போற்றுவோம் என்று
இன்றும், என்றும் இவ்வுலகிற்கு உரக்கச் சொல்வோம்.
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்,
கவிஞர் பா.பிரேமா.