60- தூக்கி வினை செய்

செல்விக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம்.

அவள் இருப்பதோ சின்ன கிராமம்.

  ஒரு மையில் தூரத்தில் பள்ளிக்கூடம் இருந்தது.

செல்வி படிப்பின் மேல் கொண்ட ஆசையால் நடந்து சென்று படிக்க ஆரம்பித்தாள்.

பத்தாம் வகுப்பு  முடித்து விட்டாள். மேலும், படிக்கச் செல்லும்போது வகுப்புக்கு பாடம் நடத்த முடியுமா?என்று தலைமை ஆசிரியர் கேட்டார்.

செல்விக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால். உடனே, சரி என்று சொல்லி விட்டாள் செல்வி.

படித்துக் கொண்டே பாடங்களை சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் ஆகி விட்டாள் செல்வி.

அந்த கிராமத்தில் சொல்லிக் கொடுக்க  ஆசிரியர் பற்றாக் குறையே காரணம்.

இன்று… செல்வி பட்டதாரி ஆசிரியர் ஆகி படித்த பள்ளிக் கூடத்திலேயே ஆசிரியர் ஆகிவிட்டாள்.

இதைத் தான் புலவர் ஔவையார் “தூக்கி வினை செய்” என்று கூறியிருக்கிறார்.

Share.

Leave A Reply