62- தேசத்தோ டொத்துவாழ்
வரலாறு பாடம் நடத்தினார் ஆசிரியர்.
நமது இந்தியா நாடு பலமொழி பேசினாலும், பல மதங்கள் இருந்தாலும் சுதந்திரம் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றுபட்டதால் அடிமை விலங்கை உடைத்து எழுச்சி கொண்டு சுதந்திரம் பெற்றோம்.
இன்று இந்தியா மதிக்கப் படுகிறது என்றால் தேச ஒற்றுமை, பண்பாடு, கலாச்சாரம் முக்கிய காரணம்.
“காந்தி தாத்தா” என அன்போடு வழிவழியாக அழைக்கிறோம் என்றால்… மகாத்மா காந்தியைத்தான்.
அகிம்சை வழியில் ஒன்று சேர்த்தவர். “தேசத்தோ டொத்துவாழ்” என ஔவையாரும் கூறிச் சென்று இருக்கிறார். என ஆசிரியர் சொன்னதை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் மாணவர்கள்.
ஆசிரியரும் தொடர்ந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.