58- தீவினை யகற்று
சித்ராவும், சசியும் தோழிகள். அவர்கள் வீட்டிற்கு அருகில் ஒரு தோட்டம் இருந்தது.
அங்கு சிறுவர், சிறுமிகள் சென்று விளையாடுவார்கள்.
தோட்டத்துக்காரர் சிறுவர்கள் விளையாடட்டும் என்று விடுவார்கள். அங்கு ஓடிப் பிடித்து, கண்ணாமூச்சி, நொண்டி விளையாடு வார்கள்.
ஒரு நாள் விடுமுறை என்பதால் சித்ராவும், சசியும் நொண்டி விளையாடிவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது தும்பி, பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த சசி மெதுவாகச் சென்று தும்பியை பிடித்தாள்.
அதன் வால் முனியில் பக்கத்தில் கிடந்த நூலை எடுத்து கட்டி பறக்க விட்டு சந்தோசப்பட்டாள்.
தும்பி நூல் இருந்த தூரம் பறந்து, பின் பறக்க முடியாமல் துன்பப் பட்டது.
இதை கவனித்த சித்ரா, சசி பக்கத்தில் வந்து தும்பி கட்டி இருந்த நூலை வாங்கினாள்.
சசியும் தும்பி கட்டி இருந்த நூலை கொடுத்தாள்.
சித்ரா தும்பி முனையில் கட்டி இருந்த நூலை எடுத்துவிட்டாள். தும்பி பறந்து சென்று ஒரு செடியில் அமர்ந்து கொண்டது.
சித்ரா மேல் கோபப் பட்டாள் சசி. ஏன் தும்பியை விட்டாய் என்று.
தும்பி சுதந்திரமாக பறந்து விளையாடியது. அதை பார்த்து ரசிக்காமல் அதன்வாலில் நூலைக் கட்டி துன்பப் படுத்துகிறாய்! அது பாவமல்லவா?
உயிரை துன்பப் படுத்துவது பாவம் என்பதை “தீவினை யகற்று” என்று புலவர் ஔவையார் ஆத்திசூடியில் சொல்லி இருக்கிறார்கள்.
பாவமான காரியத்தை செய்யாதே சசி என்று தனது தோழியிடம் அன்புடன் கூறினாள் சித்ரா.
இந்த கருத்தை ஏற்றுக் கொண்டது போல் தலையை ஆற்றினாள் சசி.