65-தோற்பன தொடரேல்
தேவாவிற்கு பந்து விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.
விளையாட்டு என்றால் உட்சாகமாக இருப்பவன்,
படிக்கச் சொன்னால் அதில் அதிகம் கவனம் செலுத்த மாட்டான்.
தேவாவின் அம்மா, அப்பா
இருவருக்கும் மகனை நல்லா படிக்க வைத்து அரசுப்பணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்.
தேவாவின் மதிப்பெண்
வரும் போது எல்லாம்
அம்மாவிடம் திட்டு, அடி…. பின் அப்பாவிடம் அடி!…
வாங்கி…வாங்கி உடல்
வலியை விட மனவலி
அதிகமாகி விட்டது.
ஒரு நாள் அம்மாவிடம்
தேவா கூறினான்.
அம்மா! என்னை படி…படி
என்று கட்டாயப் படுத்தாதீர்கள். எனக்கு விளையாட்டில் தான் ஆர்வம். அதில் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன் என்றான் நம்பிக்கையுடன்.
வாயடைத்துப் போனவள்,
பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக விளையாட்டுப்
பிரிவில் சேர்த்து விட்டார்கள் தேவாவை.
அவன் பள்ளியில் வெற்றி
பெற்று, இன்று மாநில அளவில் வெற்றி பெற்று,
இந்தியா நாட்டுக்காக விளையாடப் போகிறான்.
“தோற்பன தொடரேல்” என்று ஔவையார் கூறி இருக்கிறார். தேவா எடுத்த தெளிவான முடிவால் அவன் பெற்றோருக்கும் பெருமை, நாட்டிற்கும் புகழ் சேர்க்கிறான்.