சித்திரை வெயில் சுட்டு
எரிக்கும்
      பௌர்ணமி நாளில் குளிர்ச்சி தரும்
சத்திரம் எல்லாம் கூட்டம் நிறையும்
       கள்ளழகர் வரும் காட்சி காண
நித்திரை வர நேரம் ஆகும்
         முழு நிலவு கண்டு பூசித்து
முத்திரை பதித்த சித்திரா பௌர்ணமி
         சிந்தை மகிழ்விக்கும் முழு நிலவு.


உலகம்  யாவும் சுற்றும் நிலவே
         உன்னைக் கண்டு வணங்கி யாசிப்பார்
அலர்தல் விரித்து  மணம் வீசும்
        அல்லி மலரும் அசைந்  தாடும்
இலவம் பஞ்சு வெடித்து சிதரும்
       வெண் பஞ்சுகள் பறந்து உலாவரும்
நிலவும் மேகத்தில் மறைந்து மறைந்து
      விளையாடி வெண் வெளிச்சம் காட்டும்.

கல்வி ஞானம் தர
வேண்டி
       பௌர்ணமி நாளில் பூசை  செய்து
உல் ஒளி வெளிச்சம் பெற
       உயர்வு வேண்டி பூசை செய்வர்
ஆல் போல் வேர் ஊன்றி
        நிழல் கொடுக்கும் மரம் போல்
வேல் கொடுத்த மதுரை
மீனாட்சி
        மக்கள் குறை களையும் பௌர்ணமி.

Share.

Leave A Reply